திருவள்ளூரில் நாளை வேலைவாய்ப்பு முகாம்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.

திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருவள்ளூர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில், நாளை காலை 10:00 - மாலை 3:00 மணி வரை, சிறு அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

இதில், 25க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்று, 250க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களுக்கு, தங்களுக்கு தேவையான ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். முகாமில் பங்கேற்க உள்ள தனியார் நிறுவனங்கள் மற்றும் வேலை தேடுவோர், www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.

முகாமில் 10, பிளஸ் 2, பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ., மற்றும் டிப்ளமா படித்தவர்கள் பங்கேற்று, தனி யார் துறையில் சி.என்.சி., வி.எம்.சி., செக்டர், தரக்கட்டுப்பாட்டு ஆய்வாளர், சைட் இன்ஜினியர், மிஷின் ஆப்பரேட்டர் உள்ளிட்ட பணி வாய்ப்பை பெற்று பயனடையலாம்.

தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமில், பணி நியமனம் பெறுபவர் களின் வேலை வாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement