அடிக்கடி பழுதாகும் பேட்டரி வாகனம் குப்பை சேகரிப்பு பணியில் தொய்வு
காரைக்குடி: காரைக்குடி மாநகராட்சியில் பேட்டரி வாகனங்கள் அடிக்கடி பழுதாவதால் வீடுகளில் குப்பைகளை வாங்குவதில் சிக்கல் நிலவுகிறது.
காரைக்குடி மாநகராட்சியில் 300க்கும் மேற்பட்ட தற்காலிக பணியாளர்களும் 150க்கும் மேற்பட்ட நிரந்தர பணியாளர்களும் பணியாற்றி வருகின்றனர். மாநகராட்சியில் உள்ள 36 வார்டுகளிலும், குப்பை சேகரிக்கும் வண்டிகள் மூலம் துாய்மை பணி மேற்கொள்ளப்படுகிறது. தள்ளுவண்டி மூலம் குப்பைகளை சேகரித்து வந்த நிலையில், தற்போது, துாய்மை பணியாளர்களுக்கு பேட்டரி வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளது. 30-க்கும் மேற்பட்ட பேட்டரி வாகனங்கள் உள்ளது. பேட்டரி வாகனங்களில் அடிக்கடி பழுது ஏற்படுவதாலும், பேட்டரி சார்ஜ் நிற்காததாலும் பல வார்டுகளில் பேட்டரி வாகனங்கள் பயன்படுத்தாமல் மூன்று சக்கர வாகனங்களையே பயன்படுத்தி வருகின்றனர்.
15 வார்டு மக்கள் கூறுகையில்: இரண்டு நாளுக்கு ஒரு முறை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் வீடுகளில் குப்பை சேகரித்து செல்கின்றனர். ஆனால் நான்கு நாட்களாக குப்பை எடுக்கவில்லை. கேட்டால் பேட்டரி வாகனங்கள் பழுதாகி கிடப்பதாக கூறுகின்றனர். பல இடங்களில் இதே பிரச்னை நிலவுகிறது. பெரிய வாகனங்கள் மூலம் முக்கிய சாலைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் மட்டும் குப்பைகளை வாங்கி விட்டு சென்று விடுகின்றனர். வீடுகளுக்கு வருவதில்லை. குப்பைகளை கொட்ட முடியாமல் சிரமப்படுகிறோம்.
அதிகாரிகள் கூறுகையில்: பேட்டரி வாகனங்கள் அடிக்கடி பழுதாவது, பேட்டரி சார்ஜ் நிற்பதில் பிரச்னை ஏற்படும். உடனடியாக சரி செய்யப்பட்டு விடும். பிரச்னை ஏற்படும் வண்டிகளுக்கு மாற்றாக வேறு வண்டிகள் மாற்றி அனுப்பப்படும். வேறு ஏதேனும் பணி காரணமாக குப்பை சேகரிப்பதில் தாமதம் ஏற்பட்டிருக்கலாம். உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும்
-
இழுபறி செய்த தேமுதிக; இழுத்துப்பிடித்தது திமுக!
-
கூட்டணியில் தேமுதிக இணைந்தது பெருமகிழ்ச்சி: முதல்வர் ஸ்டாலின்
-
திமுக கூட்டணியில் இணைந்தது தேமுதிக: முதல்வர் ஸ்டாலினை சந்தித்தார் பிரேமலதா
-
விஜய் பேசியது என்னுடைய வசனம்; சீமான் ஆவேசம்
-
தமிழைக் காத்த தலைமகன் உ.வே.சா.,வுக்கு இன்று பிறந்தநாள்!
-
இறங்கிய வேகத்தில் தங்கம் விலை ஏறுமுகம்; சவரனுக்கு ரூ.2,160 அதிகரிப்பு