கி.கிரியில் சாலை மறியலில் ஈடுபட்ட அங்கன்வாடி ஊழியர் 260 பேர் கைது
கிருஷ்ணகிரி: தி.மு.க., அரசு தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்றாததை கண்டித்து, கிருஷ்ணகிரியில் சாலைமறியலில் ஈடுபட்ட, அங்கன்வாடி ஊழியர்கள், 260 பேர் கைது செய்யப்பட்டனர்.
கடந்த, 2021 சட்டசபை தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத, தி.மு.க., அரசை கண்டித்து, அங்கன்வாடி ஊழியர்கள் சங்கத்தினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்ட் அண்ணாதுரை சிலை அருகே நேற்று அங்கன்வாடி ஊழியர் சங்க மாநில துணைத்தலைவர் நோஹிரா தலைமையில் அச்சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த, 2021 தேர்தலுக்கு முன் வழங்கிய வாக்குறுதிப்படி, அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்களுக்கு காலமுறை ஊதியம், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஓய்வூதியம், 9,000 ரூபாய் பணிக்கொடை, 10 லட்சம் ரூபாய் வழங்க கோரி கோஷங்கள் எழுப்பினர். தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட முயன்ற, 3 ஆண்கள் உட்பட, 260 பேரை, கிருஷ்ணகிரி டவுன் போலீசார் கைது செய்து, தனியார் மண்டபத்தில் அடைத்தனர். பின் மாலையில் விடுவித்தனர்.
மேலும்
-
இழுபறி செய்த தேமுதிக; இழுத்துப்பிடித்தது திமுக!
-
கூட்டணியில் தேமுதிக இணைந்தது பெருமகிழ்ச்சி: முதல்வர் ஸ்டாலின்
-
திமுக கூட்டணியில் இணைந்தது தேமுதிக: முதல்வர் ஸ்டாலினை சந்தித்தார் பிரேமலதா
-
விஜய் பேசியது என்னுடைய வசனம்; சீமான் ஆவேசம்
-
தமிழைக் காத்த தலைமகன் உ.வே.சா.,வுக்கு இன்று பிறந்தநாள்!
-
இறங்கிய வேகத்தில் தங்கம் விலை ஏறுமுகம்; சவரனுக்கு ரூ.2,160 அதிகரிப்பு