ராமநாதபுரத்தில் திரியும்   குரங்குகளுக்கு  ஆபத்து வனத்துறை நடவடிக்கை தேவை

ராமநாதபுரம்: ராமநாதபுரம் நகர், புற நகர் குடியிருப்பு பகுதியில் குரங்குகள் கண்டபடி சுற்றித்திரிவதால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். ரோட்டில் வரும் போது விபத்தில் அடிப்பட்டு குரங்குகள் பலியாக வாய்ப்பு உள்ளது. எனவே அவற்றை பிடிக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராமநாதபுரம் வனப்பகுதிகளில் போதிய உணவு, தண்ணீர் கிடைக்காமல் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், பட்டணம் காத்தான் கிழக்கு கடற்கரை சாலை மற்றும் ராமநாதபுரம் நகரில் குரங்குகள் திரிகின்றன. இவை வீடுகளில் காம்பவுண்ட் சுவர், தென்னை மரங்களில் தாவி குதிக்கின்றன. இவை வீட்டிற்குள் வந்து விடுமோ என பெண்கள், சிறுவர்கள் அச்சமடைந்துள்ளனர்.

குறிப்பாக வாகன போக்குவரத்து மிகுந்த மதுரை ரோட்டில் குறுக்கே செல்லும் குரங்களுக்கும், அவற்றால் வாகன ஓட்டிகளுக்கும் விபத்து அபாயம் உள்ளது. எனவே ராமநாதபுரம் நகர், புறநகர் குடியிருப்பு பகுதிகளில் திரியும் குரங்குகளை பிடிக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement