2028 டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்; இந்தியா உள்பட 12 அணிகள் நேரடி தகுதி
புதுடில்லி: 2028ம் ஆண்டு நடக்கும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு இந்தியா உள்ளிட்ட 12 அணிகள் நேரடியாக தகுதி பெற்றுள்ளன.
2026 டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகின்றன. தற்போது, லீக் போட்டிகள் முடிவடைந்த நிலையில், சூப்பர் 8 சுற்று ஆட்டங்கள் வரும் 21ம் தேதி முதல் துவங்க இருக்கின்றன.
இந்த நிலையில், 2028ம் ஆண்டு நடக்கும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு நேரடியாக தகுதி பெற்றுள்ள அணிகளின் விபரங்கள் வெளியாகியுள்ளன. அதாவது, தற்போது நடந்து வரும் டி20 உலகக்கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியதன் அடிப்படையில் அணிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
அதன்படி, இந்தியா, தென்னாப்ரிக்கா, ஜிம்பாப்வே, வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்து, இங்கிலாந்து, பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் தேர்வாகியுள்ளன. அதேபோல, ஐசிசி தரவரிசையின் அடிப்படையில் வங்கதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள் தகுதிபெற்றுள்ளன. சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெறாத ஆஸ்திரேலிய அணி, 2028 உலகக்கோப்பை தொடரை நடத்தும் அணி என்றதன் அடிப்படையில் தேர்வாகியுள்ளது.
மூர்க்க வங்க தேசம் தில் இருந்தால் 2028 தொடரில் இருந்த வெளியேற வேண்டும். அவனுக்கு முட்டு குடுக்கும் போக்கிரிஸ்தானும் விலகி தங்களின் சித்தாந்தத்தை உலகிற்கு பறை சாற்றி வேண்டும்
போக்கிரிஸ்தான் இல்ல போர்கிஸ்தான்
ஹா ஹா பக்கத்து நாடு, மாநிலம், ஊர், வீடு என்றாலே பிரச்சினை தான் ங்கமேலும்
-
நீதிமன்ற நேரத்தை வீணடிக்க முயற்சித்தால் அபராதம் விதிக்க நேரிடும்: ராமதாசுக்கு ஐகோர்ட் எச்சரிக்கை
-
ஈரான் மீது தாக்குதலுக்கு அமெரிக்கா திட்டம்; விமானப்படை தளம் பயன்படுத்த பிரிட்டன் அனுமதி மறுப்பு
-
ஏஐ தொழில்நுட்பத்தில் இந்தியா அசுர வளர்ச்சி பெறும்; கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை நம்பிக்கை
-
8000க்கும் மேற்பட்ட ரோபோடிக் அறுவை சிகிச்சைகள்: அப்போலோ மருத்துவமனை சாதனை
-
சுயமரியாதை சீண்டப்பட்டால் முதல் குரல் எழுப்புவேன்: சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
-
அமைச்சர் நேரு மீது வழக்குப் பதிவு செய்யாத முதல்வர் ஸ்டாலின் பதில் என்ன? கேட்கிறார் அண்ணாமலை