தேர்தல் நெருங்குது; வளர்ச்சி பணிகளை வேகப்படுத்துங்க! ஓட்டுக்கேட்டு போக முடியாதென கவுன்சிலர்கள் புலம்பல்
வால்பாறை: சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில், வார்டுகளில் வளர்ச்சி பணிகளை விரைந்து முடிக்க வேண்டும், என, வால்பாறை கவுன்சில் கூட்டத்தில், கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.
வால்பாறை நகராட்சி அவசரக்கூட்டம் தலைவர் அழகுசுந்தரவள்ளி தலைமையில் நடந்தது. கூட்டத்திற்கு கமிஷனர் குமரன், பொறியாளர் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை தலைவர் செந்தில்குமார் வரவேற்றார்.
வீரமணி (வி.சி.,), மகுடீஸ்வரன், காமாட்சி (தி.மு.க.,): வால்பாறை புதுமார்க்கெட் பகுதியில் 9 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வணிகவளாகம் கட்டும் பணியை நிறுத்த வேண்டும். இதனால், வியபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கும் என்பதாலும், சட்டசபை தேர்தல் நெருங்குவதாலும், இந்த பணியை ரத்து செய்ய வேண்டும்.
கமிஷனர்: மார்க்கெட் பகுதியில் புதிய வணிகவளாகம் கட்டும் பணிக்கு ஏற்கனவே மன்றக்கூட்டத்தில் இரண்டு முறை கவுன்சிலர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க ஒத்தி வைக்கப்பட்டது. தமிழக அரசு கொண்டு வந்துள்ள இந்த திட்டத்தை ரத்து செய்ய எனக்கு அதிகாரிகள் இல்லை. எனவே திட்டமிட்டபடி மார்க்கெட் பகுதியில் உள்ள கடைகள் அகற்றப்பட்டு, புதியதாக வணிக வளாகம் கட்டப்படும். பணிகள் முடிந்த பின் ஏற்கனவே கடை நடத்தி வரும் வியாபாரிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் கடைகள் ஒதுக்கப்படும்.
தொடர்ந்து கவுன்சிலர்கள் பேசியதாவது:
சட்டசபை தேர்தல் நெருங்குவதால், வார்டுகளில் வளர்ச்சி பணிகள் விரைந்து முடிக்க வேண்டும். குறிப்பாக, எஸ்டேட் ரோடுகள் சீரமைக்கும் பணியையும், தெருவிளக்குகளையும் உடனடியாக சீரமைக்க வேண்டும். வார்டுகளில் வேலை நடக்காததால் தேர்தலில் ஓட்டு கேட்க வார்டுக்குள் செல்வதில் சிக்கல் உள்ளது.
மக்களின் அடிப்படை தேவைகளை கண்டறிந்து, அந்த பகுதியில் உடனடியாக பணிகள் துவங்க வேண்டும். குறிப்பாக, பழங்குடியின மக்கள வசிக்கும் பகுதியில் ரோடு போடவும், அடிப்படை வசதிகள் செய்துதரவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வனவிலங்குகள் நடமாட்டம் மிகுந்த எஸ்டேட் பகுதியில் நகராட்சி சார்பில் கூடுதலாக உயர்கோபுர மின்விளக்குகள் அமைக்க வேண்டும். இது தவிர, பள்ளிகளுக்கு தடுப்புச்சுவர், பயணியர் நிழற்க்கூரை, மயானக்கூரை கட்ட வேண்டும்.
இவ்வாறு, பேசினர்.
கவுன்சிலர்கள் விவாதத்துக்கு பின் நடந்த கூட்டத்தில், கொண்டுவரப்பட்ட, 119 தீர்மானங்களும் 'பாஸ்' செய்யப்பட்டன.
@block_B@
வணிக வளாகம் கட்டும் பணியை ரத்து செய்யக்கோரி, கவுன்சில் கூட்டத்தில் மூன்று கவுன்சிலர்கள் மட்டுமே குரல் எழுப்பினர். மீதமுள்ள, 17 கவுன்சிலர்களும் அமைதி காத்ததால், தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனிடையே வணிகவளாகம் கட்டப்படுவதால், மார்க்கெட் வியாபாரிகளின் ஒட்டு மொத்தம் வாழ்வாதாரம் பாதிக்கும் என்று கூறி, வணிக வளாகம் கட்ட வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும், தமிழக அரசு கொண்டு வந்துள்ள இந்த திட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி, மார்க்கெட் வியாபாரிகள் நேற்று கோவை மாவட்ட கலெக்டரை நேரில் சந்தித்து மனு கொடுத்துள்ளனர்.block_B
மேலும்
-
நீதிமன்ற நேரத்தை வீணடிக்க முயற்சித்தால் அபராதம் விதிக்க நேரிடும்: ராமதாசுக்கு ஐகோர்ட் எச்சரிக்கை
-
ஈரான் மீது தாக்குதலுக்கு அமெரிக்கா திட்டம்; விமானப்படை தளம் பயன்படுத்த பிரிட்டன் அனுமதி மறுப்பு
-
ஏஐ தொழில்நுட்பத்தில் இந்தியா அசுர வளர்ச்சி பெறும்; கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை நம்பிக்கை
-
8000க்கும் மேற்பட்ட ரோபோடிக் அறுவை சிகிச்சைகள்: அப்போலோ மருத்துவமனை சாதனை
-
சுயமரியாதை சீண்டப்பட்டால் முதல் குரல் எழுப்புவேன்: சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
-
அமைச்சர் நேரு மீது வழக்குப் பதிவு செய்யாத முதல்வர் ஸ்டாலின் பதில் என்ன? கேட்கிறார் அண்ணாமலை