மானிய விலையில் மருந்துகள் விற்பனை
உடுமலை: குறிச்சிக்கோட்டை துணை வேளாண் விரிவாக்க மையத்தில், மெட்டாரைசியம் அனிசோபில், ட்ரைகோடெர்மா விரிடி, சூடோமோனஸ் புளோரோசன்ஸ், ஆகிய இயற்கை பூச்சி மற்றும் பூஞ்சான கொல்லி மருந்துகள் மானிய விலையில், விற்பனைக்கு உள்ளது.
மெட்டாரைசியம், மக்காச்சோள படைப்புழுவை நன்கு கட்டுப்படுத்தும். எருக்குழிகளில் தெளிக்கும்போது காண்டாமிருக வண்டு புழுக்களை கட்டுப்படுத்தும். காய்கறி பயிர்களில் புழுக்களை நன்கு கட்டுப்படுத்தும் குறிப்பாக கத்திரி காய்ப்புழுவை நன்கு கட்டுப்படுத்தும்
டி விரிடி மற்றும் சூடோமோனஸ் அனைத்து பயிர்களுக்கும் பயன்படுத்தலாம். வேர் அழுகல் மற்றும் வேர்வாடல், இலைக்கருகல் நோய்களை நன்கு கட்டுப்படுத்தும். தற்பொழுது தென்னையில் வேர்வாடல் நோய் வராமல் தடுக்க டிவிரிடி மற்றும் சூடோமோனஸ் பூஞ்சான கொல்லிகள் உதவும். தேவைப்படும் விவசாயிகள் துணை வேளாண் விரிவாக்க மையத்தை அணுகலாம் என வேளாண்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும்
-
நீதிமன்ற நேரத்தை வீணடிக்க முயற்சித்தால் அபராதம் விதிக்க நேரிடும்: ராமதாசுக்கு ஐகோர்ட் எச்சரிக்கை
-
ஈரான் மீது தாக்குதலுக்கு அமெரிக்கா திட்டம்; விமானப்படை தளம் பயன்படுத்த பிரிட்டன் அனுமதி மறுப்பு
-
ஏஐ தொழில்நுட்பத்தில் இந்தியா அசுர வளர்ச்சி பெறும்; கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை நம்பிக்கை
-
8000க்கும் மேற்பட்ட ரோபோடிக் அறுவை சிகிச்சைகள்: அப்போலோ மருத்துவமனை சாதனை
-
சுயமரியாதை சீண்டப்பட்டால் முதல் குரல் எழுப்புவேன்: சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
-
அமைச்சர் நேரு மீது வழக்குப் பதிவு செய்யாத முதல்வர் ஸ்டாலின் பதில் என்ன? கேட்கிறார் அண்ணாமலை