திறன் மேம்பாட்டு மையங்கள் வாயிலாக இளைஞர்களுக்கு பயிற்சி
- நமது நிருபர் -:
திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில், தொழில் நெறி வழிகாட்டுதல் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம், சிக்கண்ணா கல்லுாரியில் நடைபெற்றது. கலெக்டர் மனிஷ் நாரணவரே, துவக்கி வைத்தார். தொழில் நெறி வழிகாட்டி புத்தகம் வெளியிடப்பட்டது.
கருத்தரங்கை துவக்கி வைத்து, கலெக்டர் மனிஷ் நாரணவரே பேசியதாவது:
ஒவ்வொரு போட்டித்தேர்வையும் லட்சக்கணக்கான மாணவர்கள் எதிர்கொள்கின்றனர். ஆனால், பணியிடங்கள் எண்ணிக்கை, ஆயிரம் மட்டுமே இருக்கும். ஆகவே, திட்டமிட்டு படிக்க வேண்டும். போட்டித்தேர்வுக்கான புத்தகங்கள் என்னென்ன என்பதை தெரிந்து வைத்திருக்கவேண்டும். தற்போது, புத்தகங்கள், நுாலக வசதிகள் உள்ளன.
மாணவர்கள் விடா முயற்சியோடு தேர்வுக்கு தயாராகவேண்டும். பின்னலாடை உற்பத்தி நகரான திருப்பூரில், ஏற்றுமதியாளர்கள் சங்கமும், திறன் மேம்பாட்டு அமைச்சகமும் இணைந்து, திறன் மேம்பாட்டு பயிற்சி மையங்கள் செயல்படுத்தி வருகின்றன.
இவ்வாறு, அவர் பேசினார்.
மேலும்
-
நீதிமன்ற நேரத்தை வீணடிக்க முயற்சித்தால் அபராதம் விதிக்க நேரிடும்: ராமதாசுக்கு ஐகோர்ட் எச்சரிக்கை
-
ஈரான் மீது தாக்குதலுக்கு அமெரிக்கா திட்டம்; விமானப்படை தளம் பயன்படுத்த பிரிட்டன் அனுமதி மறுப்பு
-
ஏஐ தொழில்நுட்பத்தில் இந்தியா அசுர வளர்ச்சி பெறும்; கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை நம்பிக்கை
-
8000க்கும் மேற்பட்ட ரோபோடிக் அறுவை சிகிச்சைகள்: அப்போலோ மருத்துவமனை சாதனை
-
சுயமரியாதை சீண்டப்பட்டால் முதல் குரல் எழுப்புவேன்: சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
-
அமைச்சர் நேரு மீது வழக்குப் பதிவு செய்யாத முதல்வர் ஸ்டாலின் பதில் என்ன? கேட்கிறார் அண்ணாமலை