திமுக மீண்டும் ஆட்சிக்கு வர வாய்ப்பு: ஓபிஎஸ் பேட்டி

48


சென்னை: '' திமுக மீண்டும் ஆட்சிக்கு வர வாய்ப்பு இருக்கிறது,'' என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.


அரசியலில் இதுவரை தனது நிலைப்பாட்டை இதுவரை அறிவிக்காத முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று காலை முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசினார். அதன் பிறகு சபாநாயகர் அப்பாவுவையும் சந்தித்தார். பிறகு மீண்டும் முதல்வர் ஸ்டாலினை சந்தித்தார்.


இதன் பிறகு நிருபர்களிடம் ஓபிஎஸ் கூறியதாவது: திமுக, ஐந்தாண்டு ஆட்சியை சிறப்பாக நிறைவு செய்ததற்காக முதல்வரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன். தமிழக மக்களின் எண்ணத்தையே, எம்எல்ஏ ஐயப்பன் சட்டசபையில் வெளிப்படுத்தினார்.


பொதுவான கருத்து, இன்று இருக்கும் அரசியல் சூழ்நிலை, கடந்த 5 ஆண்டு ஆட்சி நிலை, நாட்டிற்கு செய்த சாதனை மக்கள் மனதில் ஆழமாக பதிந்து உள்ளது. மீண்டும் ஆட்சிக்கு வரும் வாய்ப்பு திமுகவிற்கு இருக்கிறது. தமிழகத்திற்கே வழி பிறந்துவிட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement