சரியானவர்களிடம் விளம்பரம் சேர்கிறது
'நன்றே செய்தல் வேண்டும், நன்றும் இன்றே செய்தல் வேண்டும், இன்றும் இன்னே செய்தல் வேண்டும்' என்ற கபிலரகவல் கூற்றுபோல, ஆங்காங்கே நடக்கும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் சேகரித்து, தொகுத்து வாசகர்களுக்கு நல்விருந்தாக படைக்கும் தினமலருக்கு ஈடு எவரும் இல்லை.
கடந்த 1957ல், எங்கள் பாட்டனார், மதிப்பிற்குரிய சாம்பசிவ ஐயர் அவர்கள், 'ரத்னா எலக்ட்ரிகல்ஸ்' என்ற நிறுவனத்தை தொடங்கினார். பின், 1967ல் என் தந்தை கிருஷ்ணமூர்த்தி அவர்கள் 'ரத்னா பேன் ஹவுஸ்' என்ற பெயரில் அந்த நிறுவனத்தை வளர்த்தார்.
ரத்னா பேன் ஹவுஸ் வளர்ச்சியில் பெரிய பங்கு 'தினமலர்' நாளிதழுக்கு தான் செல்லும்.
அந்த காலத்தில், எலக்ட்ரிகல் பொருட்களுக்கு, பாரீஸை விட வேறு எந்த இடமும் சென்னையில் பிரசித்தியாக இல்லை. அப்படி இருக்க, தி.நகரில் ராஜாபாதர் தெருவில் இருந்து செயல்பட்ட எங்கள் நிறுவனத்தை, சென்னையின் மூலைமுடுக்கில் உள்ள வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு கொண்டு சென்று, அவர்கள் தேவைக்கேற்ப பொருட்களை தயாரித்து கொடுக்க, தினமலர் உதவியது.
தினமலரில் அச்சிடும் விளம்பரங்கள், எப்போதும் சரியான வாடிக்கையாளர்களை சென்று சேர்கிறது. அதாவது நாங்கள் விரும்பும் 'டார்கெட் ஆடியன்ஸ்'. வாடிக்கையாளர்கள், தினமலர் நாளிதழில் வரும் விளம்பரத்தை வெட்டி, உடன் எடுத்து வந்து, அதில் போட்டிருக்கும் தள்ளுபடி உள்ளதா என்று கடையில் பார்த்து, பொருள் வாங்குவார்கள். அந்த அளவிற்கு விளம்பரங்கள் வாடிக்கையாளர்கள் மத்தியில் சேர்வது தான் தினமலரில் விளம்பரப்படுத்துவதன் தனிச்சிறப்பு.
75 ஆண்டுகள் என்பது ஒரு சகாப்தம். மூன்று தலைமுறைகளை தாண்டி, தினமலரின் வாசகர்கள் பரவியிருப்பது அதற்கு பெரிய பலமாக இருக்கிறது. சத்தியம், தர்மத்திற்கு உட்பட்டு அதில் வரும் ஒவ்வொரு செய்தியும் மக்களின் மனதில் ஆழப்பதிந்து, சமூகத்தின் மேம்பாட்டிற்கு பெரிதும் உதவுகிறது. அதில் பணியாற்றும் அனைவருக்கும் எங்கள் நெஞ்சார்ந்த பாராட்டை தெரிவிக்கிறோம்.
எப்போதும் அன்புடையவர்களாக அவர்கள் இருப்பதால், சுலபமாக தொடர்புகொள்ள முடிகிறது. ஆக்கப்பூர்வமான பல திட்டங்களை அமல்படுத்துகிறோம். ஏ.ஸி., டிஷ்வாஷர், சோலார் பவர், பில்ட் இன் ஓவன் போன்ற மதிப்புமிக்க பொருட்களை விற்க சரியான வாடிக்கையாளர்கள் தினமலர் வாசகர்களே. எங்கள் வளர்ச்சியில் தினமலருக்கு பெரிய பங்கு உண்டு என்று சொன்னால், அது மிகையாகாது. இன்றுபோல் என்றும் உடன் இருந்து பல நூற்றாண்டுகள் வளர வாழ்த்துகிறோம்.
கே. விஜய்
ரத்னா பேன் ஹவுஸ்