ஸ்ரீரங்கம் அடிமனை அரங்கனுக்கே சொந்தம் 19 ஆண்டு வழக்கில் திருச்சி கோர்ட் அதிரடி
திருச்சி : ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் அடிமனை பிரச்னையில், 'அடிமனை அரங்கனுக்கே சொந்தம்; அந்த இடங்களில் கட்டப்பட்ட கட்டடங்களை அகற்ற வேண்டும்' என, திருச்சி மாவட்ட நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது.
திருச்சி, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு சொந்தமான நிலத்தில், பல தலைமுறைகளாக வீடு கட்டி குடியிருக்கும், 41 பேர், தங்களுக்கு அந்த இடத்துக்கு பட்டா வழங்க வேண்டும் என, 2007ல் திருச்சி மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
கடந்த, 19 ஆண்டுகளாக நடந்த இந்த வழக்கில், நீதிபதி சுவாமிநாதன் தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பில், 'ஸ்ரீரங்கம் கோவில் நிலத்தில் குடியிருப்போரின் அடிமனைகள், அரங்கனுக்கே சொந்தமானது. அதில் வசிப்போர் அடிமனைக்கு சொந்தம் கொண்டாட முடியாது. அந்த அடிமனைகளில் வீடு கட்டியோர், 3 மாதங்களில் வீடுகளை காலி செய்து, இடமாக மீண்டும் கோவில் நிர்வாகத்திடம் இடத்தை ஒப்படைக்க வேண்டும். 'இந்த இடங்களுக்கு கடந்த காலங்களில் வழங்கிய பட்டாக்களையும் ரத்து செய்ய வேண்டும்' என, கூறியுள்ளார்.
ஸ்ரீரங்கம் அடிமனை பிரச்னை அரை நுாற்றாண்டுக்கு மேலாக நடந்து வரும் பிரச்னை. அதில், குறிப்பிட்ட சிலர் தொடர்ந்த வழக்கில், இவ்வாறு தீர்ப்பு வந்துள்ளது. இந்த தீர்ப்பு, ஸ்ரீரங்கம் நான்கு வீதிகளில் கோவில் நிலத்தில் வசிப்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
இதுகுறித்து, ஸ்ரீரங்கம் நகர் நலச்சங்க தலைவர் சுரேஷ் கூறியதாவது: ஸ்ரீரங்கம் கோவில் நிலம், 329 ஏக்கர் பரப்பு உள்ளது. இதில், 5,000 பேர் வீடு கட்டி, பல தலைமுறையாக வசிக்கின்றனர். கடந்த, 1963ல் இனாம் தார் நிலம் ஒழிப்பு சட்டம் வந்த பின், 1969ல் தமிழக அரசால் இப்பகுதி மக்களுக்கு பட்டா வழங்கப்பட்டது. அதன் பின், ஸ்ரீரங்கம் கோவில் நிர்வாகம் தொடர்ந்த வழக்கில், அடிமனை, கோவிலுக்கும், கட்டடம் கட்டியோருக்கும் சொந்தம் என, தீர்ப்பு வந்தது. அந்த தீர்ப்பு தான் இன்றும் உள்ளது.
இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளோம். இந்நிலையில் தான், 41 பேர் தொடர்ந்த வழக்கில் இந்த தீர்ப்பு வந்துள்ளது. இப்பிரச்னையில் மாவட்டத்தின் இரு அமைச்சர்களும், தமிழக அரசும் தலையிட்டால் தான், சுமூக தீர்வு கிடைக்கும். இல்லாவிட்டால், ஒரு லட்சம் பேர் பாதிக்கப்படும் சூழல் உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து (16)
GMM - KA,இந்தியா
21 பிப்,2026 - 07:41 Report Abuse
நாடு முழுவதும் கோவில் பூஜை செய்ய பூசாரிகளுக்கு கோவில் கட்டும்போது அரசர்கள் இடம் ஒதுக்கீடு செய்து வீடு கட்டி கொடுத்து தங்க அனுமதி கொடுத்து இருக்க வேண்டும். நில உரிமை வழங்கி இருக்க மாட்டார்கள் பிற கோவில் பராமரிப்பாளர்கள் தாங்கள் சமூகத்துடன் வாழ்ந்து கோவில் பணிகளை மேற்கொண்டு இருக்க வேண்டும். கோவிலுக்கு உரிய இடத்தில் நிர்வாகம் பட்டா வழங்குவது சட்ட விரோதம். கோவில் பணிக்கு உதவாத கட்டடங்கள் அனைத்தும் அகற்ற வேண்டும். திராவிடர் ஒரு கொடிய நாத்திகர். இந்த மண்ணுக்கு உரியவர் அல்ல. நாடோடி. 0
0
Reply
ஊர்குருவி - chennai,இந்தியா
21 பிப்,2026 - 07:21 Report Abuse
இதுபோன்ற கடவுள் சொத்துக்களை அபகரிப்பது ,விற்பனைசெய்வது ,மாற்றுவது போன்ற எந்தகாரியங்கலும் யாருக்கும் ஈடுபட உரிமையில்லை,அப்படிச்செய்தால் அவைகளிலெல்லாம் சட்டப்படி செல்லத்தகாதவை என்று ஏற்கனவே உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு பல உள்ளது .ஒருவேளை கோயில் நிர்வாகத்தால் கோயிலுக்கு
வருமாணம்கருதி தீர்மானம் நிறைவேற்றி வீடுகட்டிவாழ்பவர்களை தரைவாடகை நிர்ணயித்து செலுத்தீவர அறிவுறுத்தலாம் . 0
0
Reply
nisar ahmad - ,
21 பிப்,2026 - 06:57 Report Abuse
இதே மாதிரி தீர்ப்பு ஏன் வக்பு நிலத்துக்கு வருவதில்லை 0
0
Reply
GMM - KA,இந்தியா
21 பிப்,2026 - 06:56 Report Abuse
பாரத தேச தெற்கில் இருந்து வடக்கு வரை 5 சிவன் கோவில்கள் ஒரே நேர் கோட்டில் கட்டப்பட்டுள்ளன. தேச மக்கள் இணைந்து தான் கோவில் கட்டி இருக்க வேண்டும். தமிழக இந்து அறநிலைய துறை, கேரளா தேவஸ்தான போர்டு கலைக்க பட்டு மத்திய அரசு நாடு முழுவதும் உள்ள முக்கிய கோவில்களை ஒரே அமைப்பில் கொண்டு வர வேண்டும். பூலோக சக்திகள். மனிதனால் உருவாக்க முடியாது. இனி ஞானி காண்பது அரிது. பாதுகாத்து, பராமரிப்பது அவசியம். 0
0
Reply
Kasimani Baskaran - Singapore,இந்தியா
21 பிப்,2026 - 06:54 Report Abuse
பல காலமாக கோவில் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு இருக்கிறது. இந்துக்கள் சொரணையற்றுப்போய் தீம்க்காவுக்கு ஓட்டுப்போட்டால் இதுதான் நடக்கும். 0
0
Reply
ஆரூர் ரங் - ,
21 பிப்,2026 - 06:34 Report Abuse
ஆலயத்தில் சேவை செய்யும் பரம்பரைகளுக்காக வீடுகளும் மனைகளும் அளிக்கப்பட்டன.தானமாக அல்லது விலைக்கு விற்கப்படவில்லை. நம்பெருமாள்தான் அவற்றின் உரிமையாளர். விற்கும் அல்லது பெயர் மாற்றும் உரிமை யாருக்கும் இல்லை. முழுநேர ஆலய சேவை செய்யாதவர்களை வெளியேற்ற வேண்டும். 0
0
Reply
S.kausalya - Chennai,இந்தியா
21 பிப்,2026 - 05:45 Report Abuse
ஸ்ரீரங்கம் கோயில் நிலத்தில் சர்ச் எப்படி வந்தது? பிற மதத்தினர் க்கு நிலத்தை விற்ற துணிவு இப்போது இவர்களுக்கே இல்லை என்றாகி விட்டது. கோவிலில் பணி செய்வோருக்கு தான் முதலில் இந்த
இடங்களில் வீடு கட்டி கொள்ள அனுமதி தர பட்டது. அர்ச்சகர் முதல் தூய்மை பணியாளர் வரை அதை அனுபவிக்கலாம் என்றும் விற்க அனுமதி இல்லை என்றும்
சொல்லப்படுகிறது . ரங்கனின் நிலத்தில் அரசு மருத்துவ மனை பேருந்து நிலையம் அரசு அலுவலகங்கள் உள்ளன. நிலங்கள் விற்க தொடங்குகிறது போதே இதை தடுத்து இருக்க வேண்டும் .கட்டிடங்கள் பல்கி பெருகி விட்ட பின் மதசார்பின்மை என்னும் அஸ்திரத்தின் அடிபடையில் பிற மதத்தினர் ஐயும் உள்ளே அனுமதித்து விட்டனர். இப்பொழுது வந்து அரங்கன் நிலம் அரங்கனுக்கே என்றால் எப்படி?
பல நூற்றாண்டு கால பிரச்சனை இது. இங்குள்ள மக்களும் அனுபவ பாத்தியதை
மட்டும் எடுத்து கொண்டு இருக்கலாம். அதை விடுத்து பட்டா கேட்டது தப்புதான்.
அப்படி பார்த்தால் தமிழ்நாட்டில் முக்கால்வாசி நிலங்கள் கோவிலுக்கு சொந்தம் தான். பத்திர பதிவு அலுவலகத்தில் இதை ஏன் முதலிலேயே
மறுக்க வில்லை . ஆனாலும் அரங்கன் சொத்து அரங்கனுக்கு தான். அனுபவித்து
கொள்ளலாம் உரிமை கிடையாது நல்ல தீர்ப்பு 0
0
Reply
Easu - Erode,இந்தியா
21 பிப்,2026 - 05:25 Report Abuse
வருடத்தை பாருங்கள் 1969 எந்த அரசாங்கம் ஆட்சியில் இருந்தது உடனே புரியும் கோயில் சொத்துக்கு இடையூறு 0
0
Reply
Gnana Subramani - Chennai,இந்தியா
21 பிப்,2026 - 04:55 Report Abuse
குடியிருப்பவர்கள் எல்லோரும் இந்துக்கள் தானே. 0
0
Reply
vaiko - Aurora,இந்தியா
21 பிப்,2026 - 03:11 Report Abuse
சரியான தீர்ப்பு. அடுத்து chidambaramthaan. 0
0
Reply
மேலும் 6 கருத்துக்கள்...
மேலும்
Advertisement
Advertisement