2026ல் பல வர்த்தக ஒப்பந்தங்களில் இந்தியா முத்திரை பதிக்கும்; பியூஷ் கோயல்
புதுடில்லி: 2026ம் ஆண்டில் பல வர்த்தக ஒப்பந்தங்களில் இந்தியா முத்திரை பதிக்கும் என மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது:
பிரிட்டன் மற்றும் ஓமன் நாடுகளுடனான இந்தியாவின் சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்கள் ஏப்ரல் மாதத்தில் செயல்படுத்தப்படும். இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் மார்ச் மாதத்தில் கையெழுத்தாகி ஏப்ரல் மாதத்தில் செயல்படுத்தப்படும். நியூசிலாந்து உடனான வர்த்தக ஒப்பந்தம் செப்டம்பரில் செயல்பாட்டுக்கு வரும்.
இந்தியா சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது. அடுத்த 25 ஆண்டுகளில் வேகமாக வளரும் பெரிய பொருளாதார நாடாக மாறுவதில் ஏற்றுமதி முக்கிய பங்கு வகிக்கும். இந்தியாவின் விரைவான மாற்றம் நாடு முழுவதும் சிறு,குறு நிறுவனங்கள் மற்றும் தொழில்முனைவோருக்கு வாய்ப்புகளை உறுதி செய்ய வேண்டும்.2026ம் ஆண்டில் பல வர்த்தக ஒப்பந்தங்கள் மற்றும் சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களில் இந்தியா இறுதி முத்திரை பதிக்கும். இவ்வாறு பியூஷ் கோயல் கூறினார்.
எங்கள் தமிழகத்தின் மாடல் 2.0 அரசும் முத்திரை படைக்கும்.
என்னமா கூவுறான்பா இவர்.
வாழ்த்துக்கள்மேலும்
-
மேற்கு வங்க அரசு - தேர்தல் கமிஷன் இடையே நம்பிக்கை இல்லை! எஸ்.ஐ.ஆர்., வழக்கில் மாவட்ட நீதிபதிகள் மேற்பார்வையிட சுப்ரீம் கோர்ட் உத்தரவு
-
ரம்ஜான் சிந்தனைகள் -3
-
அமைச்சர் நேரு துறையில் ஊழல்! வழக்கு பதிய ஐகோர்ட் உத்தரவு
-
சரியானவர்களிடம் விளம்பரம் சேர்கிறது
-
ஸ்ரீரங்கம் அடிமனை அரங்கனுக்கே சொந்தம் 19 ஆண்டு வழக்கில் திருச்சி கோர்ட் அதிரடி
-
மீண்டு வருவாரா அபிஷேக் சர்மா: இந்திய ரசிகர்கள் எதிர்பார்ப்பு