தேர்தல் கமிஷன், மேற்கு வங்க அரசு மோதல்: சுப்ரீம் கோர்ட் கவலை
புதுடில்லி: தேர்தல் கமிஷன் மற்றும் மேற்கு வங்க அரசு இடையே ஏற்பட்டுள்ள மோதல் துரதிர்ஷ்டவசமானது என சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
மேற்கு வங்கத்தில் நடக்கும் எஸ்ஐஆர் பணிகள் தொடர்பாக தேர்தல் கமிஷனுக்கும், திரிணமுல் காங்கிரஸ் அரசு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
எஸ்ஐஆர் தொடர்பான வழக்கை விசாரணையின் போது சுப்ரீம் கோர்ட் கூறியதாவது: அரசியல் சாசன அமைப்புகள் இடையே நம்பிக்கை பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது துரதிர்ஷ்டவசமானது. மாநில அரசு மற்றும் தேர்தல் கமிஷன் மாறி மாறி குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றன. இப்போது கோரிக்கைகளுக்கும் ஆட்சேபனைகளுக்கும் இடையே மக்கள் சிக்கிக் கொண்டு உள்ளனர்.
எஸ்ஐஆர் பணிக்காக மாவட்ட நீதிபதி பதவியில் உள்ள நீதிபதிகளை கோல்கட்டா ஐகோர்ட் நியமிக்க வேண்டும். அசாதாரண சூழ்நிலை காரணமாக அசாதாரண உத்தரவை பிறப்பிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
எஸ்ஐஆர் பணியில் எஸ்டிஓ,எஸ்டிஎம் பணிக்கு குரூப் ஏ பிரிவு அதிகாரிகளை நியமிக்க வேண்டும். வாக்காளர் பதிவு அதிகாரி பணியை மேற்கொள்ள மாநில அரசு நியமிக்கும் அதிகாரிகள் குறித்து பிரச்னை எழுகிறது.மாநிலஅரசு அளித்து தேர்தல் கமிஷன் நியமித்துள்ள அதிகாரிகளின் பதவி குறித்து நீதிமன்றம் முடிவு செய்ய முடியாது.
சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களின் உண்மைத்தன்யை உறுதி செய்வதற்கும், வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்கவும் நீக்கவும், மாவட்ட நீதிபதி அல்லது மாவட்ட கூடுதல் நீதிபதி அந்தஸ்தில் உள்ள பதவியில் உள்ளவர்கள் அல்லது முன்னாள் நீதிபதிகளை நியமிக்க வேண்டும் என கோல்கட்டா ஐகோர்ட் தலைமை நீதிபதியிடம் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தேர்தல் ஆணையம் மற்றும் மேற்கு வங்க நிர்வாக் மோதலை சட்ட விதி இல்லாமல் உருவாக்கியது அரசியல் வழக்கறிஞர்கள். இது போல் ஒவ்வொரு மாநிலமும் மோதலை உருவாக்கலாம். மாநிலம் ஏற்க மறுக்கலாம். நாளை நீதிமன்றமுடன் மாநிலம் மோதலை உருவாக்கலாம். அரசியல் கட்சிக்கு மக்கள், பணம், வெளிநாட்டு ஆசீர்வாதம், ரவுடி கூட்டம் உண்டு. நீதிமன்றத்திற்கு யாரும் கிடையாது. ஒரு நொடியில் அமைதியை சீர்குலைந்து விடுவர். சில மாநில அரசியல் கட்சிகள் ஊழல், சட்ட விரோத பிரச்சனையில் சிக்கியுள்ளன. தேர்தல் ஆணையம் நடவடிக்கையில் என்ன குறை.? அனைத்து மூல ஆவணங்கள் வழங்குவது மாநில நிர்வாகம். அது நீதிமன்றத்தை ஏமாற்றுவது ஆச்சரியமாக உள்ளது.
மேற்கு வங்கத்திற்குள் ஊடுருவிய பங்களாதேஷிகள் சமர்ப்பிக்கும் ஆவணங்களில் உண்மைத்தன்மை இல்லை என்பது தான் உண்மை.
உண்மைத்தன்மை இருக்கிறதா? என்பதை பார்க்க வேண்டும் என்று மத்திய தேர்தல் ஆணையம் மாநில அரசை அறிவுறுத்துவது நியாயம் தானே அதுதானே தேர்தல் ஆணையத்தின் பணி.
மத்திய தேர்தல் கமிஷனை மம்தா பானர்ஜி எதிர்த்தால், மேற்கு வங்காளம் முழுவதும் வசிக்கும் ஹிந்து ஓட்டுக்கள் பறிபோய்விடும்.
மத்திய தேர்தல் கமிஷனை மம்தா பானர்ஜி எதிர்த்தால், காலாகாலமாக மேற்கு வங்கத்திற்குள் ஊடுருவிய பங்களாதேஷிகளின் ஓட்டுக்கள் பறிபோய்விடும்.
இந்த நிலையில் ராகுல் காந்தி, தேஜஸ்வி யாதவ், உத்தவ் தாக்கரே போன்றோர் உரக்கக் கத்தி, காட்டுக் கூச்சல் போட்டு மத்திய தேர்தல் கமிஷனை எதிர்த்த போதும், மம்தா பானர்ஜி சப்த நாடியிலிருந்தும்,, ஒரு நரம்பிலிருந்தும் கூட சப்தம் வராமல் ஷோக்காக அமைதியாக, எல்லோரும் பாராட்டும் வகையில் மம்தா பானர்ஜி இருந்தார்.
ஆனால், மம்தா பானர்ஜி ஒரு நாள் காலை கிழக்கே தெளிவாக வெளிச்சம் வருவதற்குள் திடீரென்று உச்சநீதிமன்றத்தில் போய் வாதாட முடிவெடுத்தது விட்டார். அது தவறான செயல் என பெரும்பாலானோர் பாரதம் முழுவதும் கருத்து சொல்ல ஆரம்பித்து விட்டனர். காரணம், அரசியலமைப்புச் சட்டத்தில், மிக உயர்ந்த பதவிகளில் ஒன்றான மத்திய தேர்தல் கமிஷனை எதிர்த்து வழக்காகியது தான்.
மம்தா பானர்ஜி, "தன்னுடைய நிலைமை வெசாக்-ஆகிவிட்டது" என்பதை புரிந்து கொண்டு BACK-OUT ஆகி இருக்கவேண்டும். அதைச் செய்யாமல், வழக்கு போகிற போக்கில் மம்தா பானர்ஜி தொடர்ந்து சென்றதால் மேற்கு வங்காளம் முழுவதும் உள்ள மாவட்ட நீதிபதிகளை, அவர்கள் GROUP-2 என்பதால், தேர்தல் ஆணையம் அறிவுறுத்தும் பணிகளை அவர்கள் செய்யவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
மம்தா பானர்ஜிக்கு தற்போது மூன்று வழிகள்:
1. வழக்கை வாபஸ் பெறுவது சர்வ உத்தமமான செயல்.
2. பாஜகவோடு கூட்டணி போட்டு, "ஆட்சியில் பங்கு. அதிகாரத்தில் பங்கு" என்று பதவி சுகத்தை தொடர்ந்து அனுபவிப்பது.
3. மேற்கு வங்காளத்தின் அசெம்பிளி தேர்தல் முடியும் வரை, மத்திய தேர்தல் ஆணையர் திரு. ஞானேஷ் குமார் அவர்களோடு "பழகினா மாதிரியும் இருக்கணும். ஒதுங்கினா மாதிரியும் இருக்கணும்". அப்படி இருப்பது.
தேர்தல் ஆணையம் வழக்கை வழக்கறிஞர் விசாரிக்க விட்டு இருக்க கூடாது. அவர் அரசு ஊழியர் அல்ல. நீதிபதிகள் நேரிடையாக விசாரிக்கலாம். மேற்கு வங்க தேர்தலை நிறுத்த வேண்டும் அல்லது ஆட்சியை டிஸ்மிஸ் செய்ய வேண்டும். போலீஸ் குற்றம் தடுக்க, நீதிமன்றம் தீர்வு காண மட்டும். இவர்களிடம் அடிப்படை ஆவணம் இருக்காது. நிர்வாக அதிகாரத்தை நீதிமன்றம் கைப்பற்ற நினைப்பது நாட்டில் பிரச்சனையை கூட்டும். சட்ட விதிகள் / பணி விதிகள் வகுக்காமல் நீதிபதிக்கு அதிகாரம் மாற்றுவதை மத்திய அரசு ஒருபோதும் அனுமதிக்க கூடாது. சிவில் பணி வகுத்து, ராணுவ அதிகாரிகள் கூட நியமிக்கலாம்.
மேற்குவங்க அரசு இல்லை பங்களாதேச கள்ள ஓட்டு போய்விடுமென்ற பயத்தில் மம்தாபேகம்ஜி தேர்தல்கமிஷனுடன் சண்டை போடுது . மற்றபடி அரசு ஊழியர்கள் இல்லைமேலும்
-
திமுகவை களங்கப்படுத்தி தமிழகத்துக்குள் நுழைய எதிரிகள் திட்டம்; முதல்வர் ஸ்டாலின்
-
தமிழ் கலாசாரத்தை எல்லா இடத்திலும் பரப்புங்கள்; மாணவ, மாணவியருக்கு கவர்னர் ரவி வேண்டுகோள்
-
பிராம்ப்ட் உருவாக்க செலவாகும் தண்ணீர், மின்சாரம்; மலைக்க வைக்குது ஏ.ஐ.,
-
குஜராத்தில் கார்-லாரி மோதி கோர விபத்து; ஒரே குடும்பத்தினர் 5 பேர் உள்பட 7 பேர் பலியான சோகம்
-
2026ல் பல வர்த்தக ஒப்பந்தங்களில் இந்தியா முத்திரை பதிக்கும்; பியூஷ் கோயல்
-
ஏஐ மாநாட்டில் காங். போராட்டம் தேசிய அவமானம்; பாஜ விளாசல்