திமுகவை களங்கப்படுத்தி தமிழகத்துக்குள் நுழைய எதிரிகள் திட்டம்; முதல்வர் ஸ்டாலின்

28


சென்னை: '' திமுகவை களங்கப்படுத்தி தமிழகத்துக்குள் நுழைய எதிரிகள் திட்டமிட்டுள்ளனர்,'' என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.


திமுகவின் ஐடிவிங் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: நாம் செய்த திட்டங்கள் தான் இன்று இந்தியாவுக்கே வழிகாட்டுகிறது.நவீன தமிழகத்தின் வளர்ச்சி வரலாற்றை எழுதியதே நாம் தான். அப்படிப்பட்ட நம்மை களங்கப்படுத்தி, தமிழகத்திற்குள் நுழைந்துவிடலாம், தமிழகத்தை சிதைத்துவிடலாம் என நமது எதிரிகள் நினைக்கின்றனர்.

அதற்கு அவர்கள் பயன்படுத்தும் ஆயுதம் தான் அவதூறுகள். அந்த அவதூறுகளுக்கு மட்டுமே பதில் சொல்லிக் கொண்டு இருக்காமல், சமூக ஊடகத்துக்கான 'அஜென்டா'வையும் நாம் தான் உருவாக்க வேண்டும். 'டிபென்ஸ்' மட்டுமே ஆடிக் கொண்டு இருக்கக்கூடாது. அவ்வபோது 'அட்டாக்கிங் மோடு'க்கு போக வேண்டும்.

நாம் செய்தது மக்களுக்கு தெரிய வேண்டும் என்றால், அதனை நாம் முழுமையாக தெரிந்து வைத்து கொள்ள வேண்டும். சாதனைகளை எளிதாக செய்யும் நாம், அதனை மக்களிடம் கொண்டு செல்வதில் மெத்தனமாக இருக்கக்கூடாது. திமுகவின் திட்டங்கள், சாதனைகள் தான் பேசு பொருளாகஇருக்க வேண்டும்.



இன்று நாம் எதிர்கொண்டு வீழ்த்த வேண்டிய முதல் விஷயமே பொய் செய்திகள் தான். தமிழகத்திற்குள் எப்படியாவது கலவரத்தை உண்டு பண்ண வேண்டும். அந்த கலவரத்தீயில் குளிர்காய வேண்டும் என நமது எதிரிகள் நினைக்கின்றனர். கடந்த ஐந்து ஆண்டுகளில் டிசைன் டிசைனாக பொய் செய்தியை பரப்பி பார்த்தனர். ஆனால், அவர்களின் எண்ணம் நிறைவேறவில்லை. அவர்களின் திட்டம் அம்பலப்பட்டு அவமானப்பட்டு நிற்கின்றனர்.இந்த பொய் செய்தி எனும் சவால்களை முறியடித்து ஆக வேண்டும்.அதற்கு ஒவ்வொருவரும் விழிப்புடன் ஆன்லைனில் பணியாற்ற வேண்டும்.பொய் செய்திகளை பரப்ப நிறைய ரைட் விங் அக்கவுண்ட்களை பாஜ நடத்துகிறது. பாதி அதிகாரப்பூர்வ பக்கம் மீதி மீம்ஸ் பக்கம். நம்மை பற்றி அவதூறு பரப்பினால்,உடனடியாக ஆதாரப்பூர்வமாக பதிலடி கொடுக்க வேண்டும்.



அந்த பொய் செய்திகளை படிப்பவர்களில் பாதி பேர் நமதுவிளக்கத்தை படித்தால் வெற்றி தான். இதனை ஒருவர் மட்டும் செய்தால் போதாது. ஒவ்வொருவரும் பண்ண வேண்டும். அப்போது தான் பொய் செய்திகளை பரப்புபவர்களுக்கு பயம் இருக்கும். நாம் போடும் பதிலில் பொய் செய்திகளை பரப்புவோர் ஓட வேண்டும்.நம்மை சீண்டும் வகையில் நிறைய பதிவுகளை போடுவார்கள். அதனை முதிர்ச்சியுடன் அணுக வேண்டும். காமெடியாக பதில் கொடுங்கள். கிண்டலாக பேசுங்கள். எதுவாக இருந்தாலும் பொறுமையாக, கூலாக டீல் செய்யுங்கள்.



அவர்களுக்கு வந்தால் ரத்தம், நமக்கு வந்தால் தக்காளி சட்னி என்ற நினைப்பில் தான் செய்தி சேனல்களும், தேர்தல் கமிஷனும் செயல்படுகின்றன. நீங்கள் பயன்படுத்தும் ஒவ்வொரு சொல்லையும் பொறுப்புடன் உருவாக்க வேண்டும். எதிரிகளுக்கு இருக்கும் ஊடக நமக்கு இருந்தது கிடையாது.


2019 முதல் நடக்கும் தேர்தலில் ஒரு ஒற்றுமை உள்ளது.திமுக கூட்டணி வெற்றி பெறும் என நடந்த தேர்தல் தான் அனைத்தும். ஆனால், எவ்வளவு ஓட்டு வித்தியாசம் என்ற முடிவுகளுக்காக காத்துக் கொண்டு இருக்கிறோம். 2026 தேர்தலும் அப்படித்தான். திமுகவின் வெற்றி உறுதி செய்யப்பட்ட ஒன்று. எவ்வளவுபெரிய வெற்றியாக அமையும் என்பதை நோக்கிதான் உழைத்து கொண்டு இருக்கிறோம். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement