பிராம்ப்ட் உருவாக்க செலவாகும் தண்ணீர், மின்சாரம்; மலைக்க வைக்குது ஏ.ஐ.,
புதுடில்லி: ஏஐ பிராம்ப்ட்க்காக டேட்டா மையங்களில் ஒரு நாளைக்கு 6,80,000 வாட் மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது. மேலும், அங்குள்ள சர்வர்களை குளிர்விக்க ஆண்டுக்கு 610 கோடி காலன் தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது.
செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏஐயின் ஆதிக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது. தொழில், கல்வி, பொழுதுபோக்கு என ஏதாவது ஒரு வகையில் ஏஐயை பெரும்பாலானோர் பயன்படுத்தி கொண்டு இருக்கின்றனர். தங்களுக்கு தேவையான தகவல்களை பெற அனுப்பும் கட்டளைகளுக்கு பிராம்ப்ட்கள் என பெயர். ஓபன் ஏஐ மூலம் தினமும் 25 கோடி பிராம்ப்ட்கள் அனுப்பப்படுவதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
அவ்வாறு அனுப்பப்படும் பிராம்ப்ட்கள் உடனடியாக சென்று அதற்கான விடை கிடைத்துவிட்டாலும் அதற்கு பின்னால் தகவல் மையங்களில் மின்சார நுகர்வு, தண்ணீர் பயன்பாடு மற்றும் கார்பன் உமிழ்வு குறித்து பலருக்கு தெரிவது கிடையாது.
அந்த வகையில் ஒவ்வொரு பிராம்ப்ட்க்கும் 0.34 வாட் மின்சாரம் தேவைப்படுகிறது. இது 2 நிமிடம் எல்இடி பல்புகளை எரிய வைப்பதற்கு தேவைப்படும் மின்சாரம் ஆகும். அந்த வகையில் ஒரு பயனர் தினமும் 6.8 வாட் மின்சாரம் தேவைப்படுகிறது.பயனர்களின் எண்ணிக்கை லட்சத்தை தாண்டும் போது மின்சாரத்தின் பயன்பாடும் அதிகரிக்கிறது. 10 லட்சம் பேருக்கு 6,800 வாட் மின்சாரம் தேவைப்படுகிறது. இது அமெரிக்காவில் ஒரு நாளில் 225 குடும்பங்கள் பயன்படுத்தும் மின்சாரத்தின் அளவு ஆகும்.
10 கோடி பேர் பயன்படுத்தும் போது ஒரு நாளைக்கு ஆறு லட்சத்து 80 ஆயிரம் வாட் மின்சாரம் தேவைப்படுகிறது. இது 22 ஆயிரம் வீடுகளுக்கு தேவைப்படும் மின்சாரம் ஆகும். இந்தியாவில் கோடிக்கணக்கான மக்கள் ஏஐ பயன்படுத்தும் போது மின்சாரத்தின் தேவையும் அதிகரிக்கும்.
தண்ணீர் பயன்பாடு
ஏஐ மூலம் தேடுதல் அல்லது புகைப்படத்தை உருவாக்கும் போது, அதன் பின்னால் இயங்கும் சர்வர்கள் வெளியிடும் வெப்பத்தை தணிக்க டன் கணக்கில் தண்ணீர் தேவைப்படுகிறது. இது மற்றொரு கவலை ஆகும்.
கூகுளின் 2024 சுற்றுச்சூழல் அறிக்கையின்படி ,2023 ல் டேடா மையங்கள் 610 கோடி கேலன் சுத்தமான தண்ணீரை பயன்படுத்தி உள்ளதாக தெரிவித்து உள்ளது. இது அதற்கு முந்தைய ஆண்டை காட்டிலும் 17 சதவீதம் ஆகும். ஒரு காலன் தண்ணீர் என்பது பிரிட்டன் கணக்குப்படி 4.546 லிட்டர். அமெரிக்க கணக்குப்படி 3.785 லிட்டர் ஆகும்.
அதேநேரத்தில் சில நிபுணர்கள் இதற்கு மாறான கருத்துகளை தெரிவிக்கின்றனர்.ஏஐ பயேனீர் நிறுவனத்தின் ஸ்டூவர்ட் ரஸல் கூறுகையில், ஏஐ உள்கட்டமைப்புகள் அதிகளவு இயற்கை வளத்தை பயன்படுத்தினாலும் அதனை காட்டிலும் அதிகளவு பயன்படுத்தும் துறைகளும் உள்ளன. அமெரிக்காவில் உள்ள கோல்ப் மையங்களுக்கு பல நூறு கோடி காலன் தண்ணீர்கள் ஆண்டுதோறும் பயன்படுத்துகின்றன. இது சர்வதேச அளவில் ஏஐ மையங்கள் பயன்படுத்தும் தண்ணீரின் அளவை காட்டிலும் அதிகம் ஆகும்.
க்ரிப்டோ மைனிங் ஒரு பக்கம். அடுத்த பக்கம் ஏ ஐ கணனிகளை இயக்க ஆகும் மின்சாரம் உலகத்தை அழிக்கப்போகிறது. இப்பொழுதே இப்படி என்றால் இன்னும் அதிகம் பயன்பாட்டுக்கு வந்தால் உலகம் தாங்காது. பிட் காயின் 200,000 அமெரிக்க டாலரை நெருங்கும் பொழுது மின்சாரம் இன்னும் பல மடங்கு ஆகும். மில்லியன் டாலரை நெருங்கினால் அவ்வளவுதான்...
பெரும்பாலும் உபயோகம் இல்லாத தெண்டம் தான்
AI will not be use for india. AI need water and electricity so AI uses india.
இதனை தான் திரு வேம்பு ஸ்ரீதர் அவர்கள் இரண்டு வருடங்கள் முன்னராகவே கூறினார்.
அண்ணாமலையின் நண்பர் ஸ்ரீதர் வேம்பு ஓர் உயர்ந்த மனிதர்
நன்மை இல்லாத தீமையும், தீமையில்லாத நன்மையும் கிடையாதே.
சதவீத வித்தியாசம் தான் நல்லது எது கெட்டது எது என்பதை இறுதி செய்யும் இந்த AI ஆல் கெடுதல்கள் தான் அதிகம் நிகழும் பாருங்கள்மேலும்
-
மேற்கு வங்க அரசு - தேர்தல் கமிஷன் இடையே நம்பிக்கை இல்லை! எஸ்.ஐ.ஆர்., வழக்கில் மாவட்ட நீதிபதிகள் மேற்பார்வையிட சுப்ரீம் கோர்ட் உத்தரவு
-
ரம்ஜான் சிந்தனைகள் -3
-
அமைச்சர் நேரு துறையில் ஊழல்! வழக்கு பதிய ஐகோர்ட் உத்தரவு
-
சரியானவர்களிடம் விளம்பரம் சேர்கிறது
-
ஸ்ரீரங்கம் அடிமனை அரங்கனுக்கே சொந்தம் 19 ஆண்டு வழக்கில் திருச்சி கோர்ட் அதிரடி
-
மீண்டு வருவாரா அபிஷேக் சர்மா: இந்திய ரசிகர்கள் எதிர்பார்ப்பு