காங்கிரஸ் ஆட்சியில் நுழைந்த ஊடுருவல்காரர்களை திருப்பி அனுப்புவோம்; அமித்ஷா உறுதி

3

சில்சார்; காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் நுழைந்த ஒவ்வொரு ஊடுருவல்காரரையும் நாங்கள் திருப்பி அனுப்புவோம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதி அளித்துள்ளார்.


அசாம் மாநிலம் சில்சாரில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்து, அமித்ஷா பேசியதாவது: முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மாவின் தலைமையில், அசாம் வடகிழக்கில் சுகாதார மையமாக மாறியுள்ளது. 2004ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரை காலகட்டத்தில், காங்கிரஸ் அரசு அசாமின் வளர்ச்சிக்கு ரூ.1 லட்சத்து 28 ஆயிரம் கோடி மட்டுமே வழங்கியது.


பிரதமர் நரேந்திர மோடி பத்து ஆண்டுகளில் அசாமின் வளர்ச்சிக்கு ரூ.15 லட்சம் கோடி வழங்கியுள்ளார். காங்கிரஸ் பல ஆண்டுகளாக ஆட்சி செய்தது. ஆனால் அது அசாமின் வளர்ச்சிக்கு எதுவும் செய்யவில்லை.


50 ஆண்டுகளில் காங்கிரஸால் முடியாததை, நாங்கள் பத்து ஆண்டுகளில் செய்தோம். கடந்த 5 ஆண்டுகளில், அசாமில் ஒவ்வொரு நாளும் 14 கிலோமீட்டர் சாலைகள் போடப்பட்டுள்ளன. நான்கு பெரிய புதிய பாலங்கள் உட்பட நூற்றுக்கணக்கான பாலங்கள் கட்டப்பட்டன.


இரண்டாவது ஆட்சி காலத்தில் 5 ஆண்டுகளில், முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா ஊடுருவல் காரர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்களை மீட்டுள்ளார்.
இப்போது, மூன்றாவது முறையாக தேர்தல்கள் வருகின்றன.


மீண்டும் அசாமில் பாஜ அரசு அமையும். அசாம் இரண்டு பிரச்னைகளால் சூழப்பட்டிருந்தது. ஊடுருவல்காரர்கள் அசாமியர்களின் உரிமைகளைப் பறித்தனர். இந்த காங்கிரஸ் அரசு நமது எல்லைகளை ஊடுருவல் காரர்களுக்குத் திறந்து விட்டன. காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் நுழைந்த ஒவ்வொரு ஊடுருவல்காரரையும் நாங்கள் திருப்பி அனுப்புவோம். இவ்வாறு அமித்ஷா பேசினார்.

Advertisement