கோவை ஏர்போர்ட் விரிவாக்கம் 2028ல் நிறைவேறுவது சாத்தியமா?; கலெக்டர் புறக்கணிப்பால் தொழில் அமைப்புகள் அப்செட்

5

நமது நிருபர்

கடந்த 20 ஆண்டுகளாக போராடி பெற்ற கோவை விமான நிலைய விரிவாக்க திட்டம், 2028ல், திட்டமிட்டவாறு நிறைவேறுமா; அதற்கு கோவை மாவட்ட நிர்வாகம் ஒத்துழைப்பு வழங்குமா என்ற சந்தேகம் தொழில் துறையினர் மற்றும் அமைப்புகளிடம் ஏற்பட்டுள்ளது.


கடந்த, 2004 - 2014 வரை, மன்மோகன் சிங் அரசில், விமான போக்குவரத்து துறை அமைச்சர்களாக இருவரும்; அதன்பின், 2014 முதல் தற்போது வரை, பிரதமர் மோடி அரசில், 5 பேரும் இருந்துள்ளனர்.


புதுப்புது பிரச்னை




மோடி அரசில் முதன்முதலாக 2014ல் இத்துறை அமைச்சராக பதவி யேற்ற கஜபதி ராஜூ, கோவை விமான நிலையத்தை ஆய்வு செய்து, விரிவாக்கம் குறித்து பேசினார். அதன்பின், எந்த முன்னேற்றமும் இல்லை. இந்த விமான நிலைய விரிவாக்கத்துக்காக, கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக கோவையைச் சேர்ந்த தொழில் அமைப்புகள், சமூக அமைப்புகள் பெரும் முயற்சியில் ஈடுபட்டன.

ஒவ்வொரு காலகட்டத்திலும் புதுப்புது பிரச்னை, சிக்கல் முளைத்ததே தவிர, தீர்வு காணப்படவில்லை. ஐந்து முறை எம்.பி., பதவி வகித்தவர்களில் ஒருவர் கூட, மத்திய விமான போக்குவரத்து அமைச்சரை கோவைக்கு அழைத்து, திட்டத்தை நிறைவேற்ற வேண்டிய அவசியம் குறித்து பேசவில்லை.


இந்த நிலையில்தான் தற்போதை ய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடு, விமான நிலைய ஆணைய தலைவர் விபின்குமார், மத்திய விமான போக்குவரத்து துறை செயலர் சமீர்குமார் சிம்கா ஆகியோர் நேற்று முன்தினம் கோவையில் நடந்த நிகழ்ச் சியில் பங்கேற்றனர்.


கோவை, சூரத், மும்பை, திருவனந்தபுரம், மங்களூர் விமான நிலையங்களில், 'உடான் யாத்ரி கபே' எனும், விலை குறைவான உணவக திட்டத்தை துவக்கி வைத்தது மட்டுமின்றி, நாடு முழுதும் உள்ள 39 விமான நிலையங்களில் பயணிகள் வசதிக்காக வைபை, டிஜி யாத்ரா, குழந்தைகள் விளையாட்டு பகுதி, நுாலகம் உள் ளிட்ட வசதிகளையும் துவக்கி வைத்தனர்.


இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ராம்மோகன் நாயுடு, 'கோவை விமான நிலையம் சர்வதேச தரத்துக்கு உயர்த்தப்படும்; இதன் விரிவாக்க திட்டம் 2028ல் நிறைவுறும்' என அறிவித்தது, கோவை மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக அமைந்தது.


இந்த விரிவாக்க திட்டமானது, தமிழக அரசின் முயற்சியோ, கோவை எம்.பி.,யின் முயற்சியோ அல்ல; அவ்வாறு இருந்திருந்தால், மாநில அரசின் சார்பில் எம்.பி., பங்கேற்றிருப்பார்; தங்களால் தான் விமான நிலைய திட்டம் வந்தது என தம்பட்டமும் அடித்திருப்பர்.


கலெக்டர் புறக்கணிப்பு




ஆனால், முழுக்க முழுக்க தொழில், சமூக அமைப்புகளின் முயற்சிகளால் மட்டுமே இது நடந்திருக்கிறது. இவர்கள்தான், பல முறை டில்லிக்கு படையெடுத்து வெற்றி கண்டுள்ளனர்.
கோவையில் நேற்று முன்தினம் நடந்த நிகழ்ச்சியில் விமான நிலைய ஆணைய தலைவர், விமான போக்குவரத்து துறை செயலர் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.

ஆனால், மாவட்ட நிர்வாகம் சார்பில் கலெக்டர் பவன்குமார் பங்கேற்கவில்லை. 2,136 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டத்தை மாநில அரசின் குறிப்பாக, மாவட்ட நிர்வாகத்தின் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே திட்டமிட்ட காலத்துக்குள் முடிக்க முடியும்.

விமான நிலைய விரிவாக்கத்தில் விமான போக்குவரத்து துறையும், மாவட்ட நிர்வாகமும் பேசித் தீர்க்க வேண்டிய பல பிரச்னைகள் உள்ளன.


மத்திய அமைச்சரும், சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகளும் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில், கலெக்டரும் பங்கேற்றிருந்தால், திட்டத்தை சிறப்பாக, தொய்வின்றி நிறைவேற்றுவதற்கான நல்ல வாய்ப்பும் உறவும் ஏற்பட்டிருக்கும்; இதற்கு வாய்ப்பில்லாமல் போனது துரதிருஷ்டம்.
இது இயல்பாக நடந்ததா, அல்லது கலெக்டர் வேறு தனியார் நிகழ்ச்சிக்கு முன்கூட்டியே ஒப்புக்கொண்டதால் வர முடியாமல் போனதா என்பது மாவட்ட நிர்வாகத்துக்கே வெளிச்சம். மத்திய அரசின் நிகழ்ச்சியில் கலெக்டர் பங்கேற்பதில், அரசியல் ரீதியான தடைகள் ஏதும் இருந்ததா என்றும் தெரியவில்லை.


காரணம் எதுவாக இருப்பினு ம், இந்நிகழ்ச்சியில் கலெக்டர் பங்கேற்காதது, விமான நிலைய விரிவாக்கத்திட்டத்துக்கு மாவட்ட நிர்வாகத்தின் முழுமையான ஒத்துழைப்பு கிடைக்குமா, நீண்ட காலம் போராடி பெற்ற இத்திட்டம் நிறைவேறுமா? என்ற அச்சமும் சந்தேகமும் தொ ழில்துறையினருக்கு ஏற்பட்டுள்ளது.


'அவ்வாறெல்லாம் இல்லை; மாவட்ட நிர்வாகம் முழுமையான ஒத்துழைப்பு வழங்கும்' என்பதை வெளிப்படையாக அறிவிப்பதும், அதை நிறைவேற்றிக் காட்டுவதும் கோவை மாவட்ட நிர்வாகத்தின் பொறுப்பு.

Advertisement