அல்காரஸ் சாம்பியன்: கத்தார் ஓபன் டென்னிசில்
தோகா: கத்தார் ஓபன் டென்னிஸ் ஒற்றையரில் ஸ்பெயினின் அல்காரஸ் சாம்பியன் பட்டம் வென்றார்.
தோகாவில், கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்தது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ், பிரான்சின் ஆர்தர் பில்ஸ் மோதினர். முதல் செட்டை 6-2 எனக் கைப்பற்றிய அல்காரஸ், இரண்டாவது செட்டை 6-1 என வென்றார். முடிவில் அல்காரஸ் 6-2, 6-1 என வெற்றி பெற்று இத்தொடரில் முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். ஏ.டி.பி., ஒற்றையரில் தனது 26வது பட்டம் வென்ற அல்காரஸ், இந்த ஆண்டு இதுவரை விளையாடிய 12 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளார்.
ஜெசிகா பெகுலா சாம்பியன்
துபாய் டென்னிஸ் சாம்பியன்ஷிப் பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, உக்ரைனின் எலினா ஸ்விடோலினா மோதினர். இதில் ஜெசிகா பெகுலா 6-2, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார். இது, டபிள்யு.டி.ஏ., ஒற்றையரில் ஜெசிகா பெகுலா கைப்பற்றிய 10வது பட்டம்.
மேலும்
-
திருப்பதி லட்டு தயாரிப்பை பரிசோதிக்க ரூ.3.350 கோடியில் பிரான்ஸ் இயந்திரம் இறக்குமதி
-
பிரிட்டன் விருதை வென்றது இந்திய திரைப்படம்
-
ஆப்ரிக்காவிலிருந்து மேலும் வரும் 8 சிவிங்கிபுலிகள்: 46 ஆக உயரும் சிவிங்கிபுலிகள் எண்ணிக்கை
-
மார்ச் 10ல் தமிழகம் வருகிறது மத்திய படை
-
ஜே.என்.யு., பல்கலையில் மாணவர்கள் வன்முறை; கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை
-
தன்னம்பிக்கையின் துருவ நட்சத்திரம் லுாபா