ஜே.என்.யு., பல்கலையில் மாணவர்கள் வன்முறை; கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை

புதுடில்லி: ஜவஹர்லால் நேரு பல்கலை மாணவர்களிடையே நேற்று அதிகாலை ஏற்பட்ட மோதலில் பலர் காயமடைந்தனர்.

டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலை வளாகத்தில், கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் பிரிவான ஜே.என்.யு.எஸ்.யு., அமைப்பு மாணவர்கள் திரண்டனர். துணைவேந்தர் சாந்திஸ்ரீ துலிப்புடி பண்டிட் பதவி விலக வலியுறுத்தி கோஷமிட்டனர். இதனால் பதற்றமான சூழல் நீடித்தது. பல்கலை நிர்வாகம் சார்பில் போராட்டம் நடத்தியும் சமரசம் ஏற்படவில்லை.

இந்நிலையில், ஏ.பி.வி.பி., எனப்படும் பா.ஜ.,வின் மாணவர் அமைப்பினர் திரண்டு, துணைவேந்தருக்கு ஆதரவாக கோஷமிட்டனர். இதையடுத்து, இரு பிரிவு மாணவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கியதால், பல்கலை வளாகத்தில் வன்முறை வெடித்தது.

பல்கலை வளாகத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மத்திய கல்வி அமைச்சகத்துக்கு பேரணியாக சென்று, மனு கொடுக்க ஜே.என்.யு.எஸ்.யு., அமைப்பு முடிவு செய்துள்ளது.
இதற்கிடையில், பல்கலையில் வன்முறையில் ஈடுபட்ட மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பல்கலை நிர்வாகம் அறிவித்துள்ளது.

Advertisement