ஆருத்ரா நிதி மோசடியில் சிக்கிய தம்பதி: கடன் சுமையால் மனைவி தற்கொலை
சென்னை: ஆருத்ரா நிதி நிறுவனத்தில் ஆள் சேர்த்து விட்ட தம்பதி கடனில் சிக்கிய நிலையில், மனைவி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புளியந்தோப்பு, டாக்டர். அம்பேத்கர் கல்லுாரி சாலை பகுதியை சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன், 38. வழக்கறிஞரிடம் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பரமேஸ்வரி, 29. இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
தம்பதி இருவரும், மோசடி நிதி நிறுவனமான, ஆருத்ரா கோல்டு நிதி நிறுவனத்தில் பல நபர்களை சேர்த்து விட்டுள்ளனர். இதில், அனைவரும் பணத்தை இழந்தனர்.
இதனால் பாதிக்கப்பட்டவர்கள், தம்பதியிடம் பணம் கேட்டுள்ளனர். பல இடங்களில் கடன் வாங்கி ஓரளவு செட்டில் செய்து வந்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 1.5 லட்ச ரூபாய் கடன் கொடுத்த கன்னிகாபுரத்தை சேர்ந்த கவிதா என்பவர், பரமேஸ்வரி வீட்டுக்கு சென்று பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். இதையடுத்து, பரமேஸ்வரி வீட்டில் குளியலறைக்கு சென்றவர் வெகுநேரமாகியும் திரும்பவில்லை.
சந்தேகமடைந்த ஹரிகிருஷ்ணன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, துப்பட்டாவில் துாக்கில் தொங்கிய நிலையில் கிடந்துள்ளார்.
அவரை மீட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தபோது, அவர் இறந்தது உறுதி செய்யப்பட்டது.
இதுகுறித்து ஓட்டேரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மேலும்
-
எங்களை பார்த்து திமுக பயப்பட தேவையில்லை: நயினார் நாகேந்திரன்
-
ஏ.ஐ., தொழில்நுட்பத்தால் மகள் திருமணத்திற்கு வந்த மறைந்த தந்தை
-
உங்க டப்பா எஞ்சின் தாக்குப்பிடிக்காது; சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்
-
சிக்கிமில் பனிப்பொழிவில் சிக்கிய சுற்றுலாப்பயணிகள்; பத்திரமாக மீட்ட இந்திய ராணுவம்
-
குமார ராமசாமி ராஜாவுக்கு சிலை அமைக்க கோரிக்கை
-
மஹாராஷ்டிராவில் வேன் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 5 பேர் பலி; 7 பேர் படுகாயம்