இந்தியாவின் 2வது சுதந்திர போராட்டம் துவங்கிவிட்டது; கமல்

118


மதுரை: "இந்தியாவின் 2வது சுதந்திர போராட்டம் துவங்கிவிட்டது" என மதுரையில் ம.நீ.ம.,தலைவர் கமல் பேசினார்.

கமல் பண்பாட்டு மையம் சார்பில் மகாத்மா காந்தி பற்றிய 'மறவோம் பாபுஜி மற்றும் சகோதரர்களை நினைவு கூர்வோம்' தலைப்பில் மதுரை காந்தி மியூசியத்தில் விழா நடந்தது.

அதில் தி.மு.க., கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பேசியதாவது:

மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம்: மக்கள் ஒற்றுமை, மதச்சார்பின்மை, தீண்டாமை ஒழிப்பை காந்தி வலியுறுத்தினார். காந்தியுடன் கம்யூனிஸ்ட்களுக்கு உடன்பாடும், முரண்பாடும் உண்டு. மதச்சார்பின்மை கொள்கைக்கு தற்போது ஆபத்து ஏற்பட்டுள்ளது. அதற்காக உயிரிழந்தவர் காந்தி.




இந்திய கம்யூ., மாநில செயலாளர் வீரபாண்டியன்: காந்தியின் வரலாற்றை கீழி றக்கும் முயற்சி பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடக்கிறது. காந்தியிடம் இயந்திரங்களை ஏன் எதிர்க்கிறீர்கள் என சார்லி சாப்ளின் கேள்வி எழுப்பினார்.


காந்தி, இயற்கையை சூறையாட அனுமதிக்கக் கூடாது என்றார். இன்று 40 கோடி பேருக்கு சொந்தமான சொத்துக்களை சிலர் மட்டும் வைத்துள்ளனர். காந்தியின் கனவான சமத்துவத்தை ஈடேற்றுவோம். சுட்டுக் கொன்ற நாது ராம் கோட்சேவை சிலர் மட்டும் வைத்துள்ளனர். காந்தியின் கனவான சமத்துவத்தை ஈடேற்றுவோம்.




ம.தி.மு.க.,பொதுச் செயலாளர் வைகோ: காந்தியை சுட்டுக்கொன்ற நாது ராம் கோட்சேவை
சிலர் போற்றுகின்றனர். அத்தகைய வடபுலத்து சக்திகளை தமிழகத்திற்குள் நுழைய விடமாட்டோம். இது திராவிட மண். அவர்களுக்கு இங்கு இடமில்லை. காந்தியின் புகழ் எப்போதும் அழியாது.



வி.சி.க.,தலைவர் திருமாவளவன்: காந்தியை புதிய தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டிய தேவை உள்ளது. இதில் காங்., செய்ய வேண் டிய வேலையை கமல் செய்கிறார். காந்தி ஹிந்துயிசத்தை ஏற்றவர். தீவிர மதப்பற்றாளர். ராமபக்தர். சனாதனத்தில் நம்பிக்கை கொண்டவர். மதம் சார்ந்து அரசு இயங்கக்கூடாது என்றார்.


சமூக நல்லிணக்கத்தை அவர் பேசினார். அரசியலில் மதச்சார்பின்மை கோட்பாட்டில் உறுதியாக இருந்ததால் நாதுராம் கோட்சேவால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
கமல்: இது அரசியல் கூட்டமல்ல; அன்பர்கள் கூட்டம். காந்திக்கு கட்சி கிடையாது. அவரை எந்த சுட்சியும் மொத்தமாக கொண்டு போகக்கூடாது. வாழ்க்கையை செய்தியாக கொடுத்தவர் காந்தி. அதை இளைஞர்களிடம் கொண்டு செல்ல வேண்டும். காந்தியை பூஜைக்கு உரியவராக ஆக்கிவிட்டால், அவரை வழிபடவிடாமல் மறுக்கச் செய்வர். காந்தி ஒரு மனிதன் என்ற காலம் கடந்துவிட்டது. காந்தி ஒரு ஐடியா.



காந்தியை துளைத்த 3 குண்டுகளை நிறுத்த வேண்டிய காலம் நமக்கு இருக்கிறது. அதில் கல்வி, சுகாதாரம் என்ற 2 குண்டுகளை தமிழகம் தயாரித்துவிட்டது. மக்கள் முட்டாள்கள் இல்லை. முட்டாள்கள் என்கிறது ஒரு கூட்டம். அதை அகற்ற வேண்டும். யாரும் எங்களுக்கு எதிரிகள் அல்ல. தனி மனிதர்களை எதிர்க்கவில்லை.

தனிமனிதர்களின் அவசர சட்டங்கள், சுயநல திட்டங்களைத்தான் எதிர்க்கிறோம். இந்தியாவின் 2வது சுதந்திர போராட்டம் துவங்கிவிட்டது. இவ்வாறு பேசினர். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொகிதீன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி துணை பொதுச் செயலாளர் நித்யானந்தம் உள்ளிட்டோர் பேசினர்.

Advertisement