தனியார் பஸ் கட்டணம் உயர்வு விவகாரம் குழுவின் அறிக்கை அரசிடம் சமர்ப்பிப்பு
சென்னை : தனியார் பஸ் கட்டணம் உயர்வு தொடர்பாக, கருத்து கேட்பு குழு அறிக்கை, தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
டீசல் விலைக்கு ஏற்ப, கட்டணத்தை உயர்த்த வேண்டும் என, தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் சார்பில், கடந்த ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
உதிரிபாகம்
'பஸ் டிக்கெட் கட்டணத்தை உயர்த்துவது குறித்து, நான்கு மாதங்களுக்குள் தகுந்த முடிவு எடுத்து, அரசு அறிவிக்க வேண்டும்' என, நீதி மன்றம் உத்தரவிட்டது.
அதைத் தொடர்ந்து, அரசுக்கு அறிக்கை அளிக்க, போக்குவரத்துக்கழக அதிகாரிகள் அடங்கிய குழு அமைக்கப்பட்டது.
இக்குழு அனைத்து தரப்பினரிடமும் கருத்து கேட்டு, கடந்த மாதம் அறிக்கை அளித்துள்ளது. ஆனால், தமிழக அரசு இன்னும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை.
இது குறித்து, தனியார் பஸ் உரிமையாளர்கள் சிலர் கூறியதாவது:
தமிழகத்தில் 2018ல் பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டபோது, லிட்டர் டீசல் 63 ரூபாய்; தற்போது, 92.50 ரூபாயாக உள்ளது. உதிரி பொருட்களின் விலை 40 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. தனியார் பஸ்களில் 60 சதவீதம் வழித்தடங்களில், நஷ்டத்தில் பஸ்களை இயக்கி வருகிறோம்.
நீதிமன்றம் உத்தரவின் பேரில் அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கையை, தமிழக அரசு இன்னும் இறுதி செய்யாமல் இருப்பது கவலை அளிக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
கருத்து கேட்பு
இது குறித்து, போக்குவரத்து ஆணையரக அதிகாரிகள் கூறியதாவது:
நீதிமன்றம் உத்தரவின்படி, அரசு போக்குவரத்துக் கழகங்கள், பஸ் உரிமையாளர்கள், பயணியரிடம் கருத்து கேட்கப்பட்டது. பொதுமக்களிடம் மட்டும் 1,000க்கும் மேற்பட்டோரிடம் கருத்து கேட்கப்பட்டது. அவற்றின் அடிப்படையில், தமிழக அரசிடம் அறிக்கை அளித்துள்ளோம்.
அரசு போக்குவரத்து கழகங்கள் தரப்பிலும், தனியார் பஸ் உரிமையாளர்கள் தரப்பிலும், கட்டணத்தை கணிசமாக உயர்த்த வேண்டும் என, கருத்து தெரிவித்துள்ளனர். பொதுமக்கள் பிரிவில் பெரும்பாலானோர் கட்டணத்தை உயர்த்த வேண்டாம் என தெரிவித்துள்ளனர். தமிழக அரசு தான் இறுதி முடிவை அறிவிக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும்
-
247 முறை வெளிநாடு பயணம், தேசவிரோத சக்திகளுடன் தொடர்பு; ராகுல் மீது பாய்ந்த மத்திய அமைச்சர்
-
அமமுகவுக்கு ராஜ்ய சபா சீட் வேண்டும் என்று கேட்டேனா? டிடிவி தினகரன் பதில்
-
சரிந்தது ஒரு சமரசமற்ற சகாப்தம்
-
நல்லகண்ணு மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்
-
தாய்லாந்தின் 'டைகர் கிங்டம்' பூங்காவில் பரவிய ஆட்கொல்லி வைரஸ்; 2 வாரத்தில் 72 புலிகள் உயிரிழந்த சோகம்
-
இந்திய கம்யூனிஸ்ட் முதுபெரும் தலைவர் நல்லகண்ணு காலமானார்