வெள்ளி கிலோவுக்கு ரூ.10,000 உயர்வு

சென்னை: தமிழகத்தில் நேற்று வெள்ளி கிலோவுக்கு, 10,000 ரூபாய் அதிகரித்தது.

சர்வதேச நிலவரங்களால், நம் நாட்டில் தங்கம், வெள்ளி விலையில் ஏற்ற, இறக்க நிலை காணப்படுகிறது. தமிழகத்தில் கடந்த சனிக்கிழமை, 22 காரட் ஆபரண தங்கம் கிராம், 14,680 ரூபாய்க்கும், சவரன் 1,17,440 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 290 ரூபாய்க்கு விற்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை தங்க சந்தைக்கு விடுமுறை. அன்று, முந்தைய நாள் விலையிலேயே, ஆபரணங்கள் விற்பனையாகின.

நேற்று தங்கம் விலை கிராமுக்கு 180 ரூபாய் உயர்ந்து, 14,860 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு 1,440 ரூபாய் அதிகரித்து, 1,18,880 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி கிராமுக்கு, 10 ரூபாய் உயர்ந்து 300 ரூபாய்க்கு விற்பனையானது. கிலோவுக்கு, 10,000 ரூபாய் அதிகரித்து, 3 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டது.

Advertisement