நேபாளத்தில் பஸ் ஆற்றில் கவிழ்ந்து விபத்து; 17 பேர் பலியான சோகம்

3


காத்மாண்டு: நேபாளத்தில் போகாராவிலிருந்து காத்மாண்டுவுக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற பஸ் ஆற்றில் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர்.


நேபாளத்தில் இன்று (பிப்ரவரி 23) அதிகாலை போகாராவிலிருந்து காத்மாண்டுவுக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு பஸ் ஒன்று சென்று கொண்டு இருந்தது. பஸ்சில் பயணிகள் 44 பேர் இருந்தனர். பஸ் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் நீண்ட நேரம் போராடி மீட்பு பணி மேற்கொண்டர். இந்த விபத்தில் பயணிகள் 17 பேர் உயிரிழந்தனர். ஆறு பெண்கள் மற்றும் பதினொரு ஆண்கள் என அடையாளம் காணப்பட்டனர்.



மேலும் 8 பெண்கள், 18 ஆண்கள் மற்றும் ஒரு சிறுமி உட்பட மொத்தம் 27 பேர் காயமடைந்தனர். இவர்கள் காயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டனர். பஸ் பலத்த சேதம் அடைந்துள்ளது. இந்த விபத்து அதிகாலை 2 மணிக்கு நிகழ்ந்துள்ளது.


நள்ளிரவு நேரம், அதிகாலையில் வாகன பயணத்தை தவிர்ப்பது நல்லது. வாகனம் ஓட்டுபவர் , தூக்க கலக்கத்தில் சற்று அசந்தாலும் பெரும் விபத்தில் சிக்க வாய்ப்புள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த விபத்து அதிகாலை நேரத்தில் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது.

Advertisement