ஜனாதிபதி மாளிகையில் லுட்யன்ஸ் சிலைக்கு பதிலாக ராஜாஜி சிலை!
புதுடில்லி:ஜனாதிபதி மாளிகையில் பிரிட்டீஷ் கட்டட கலைஞர் எட்வின் லுட்யன்ஸின் சிலை மாற்றப்பட்டு அந்த இடத்தில் ராஜாஜி சிலை திறக்கப்பட்டுள்ளது.
1947ல் சுதந்திரம் அடைந்த பிறகும், பிரிட்டிஷ் அதிகாரிகளின் சிலைகள் ஜனாதிபதி மாளிகையில் இருந்தன. தற்போது இது மாற்றப்பட்டு, இந்திய தலைவர்களுக்கு மரியாதை செய்யப்படுகிறது. காலனித்துவத்தை முற்றிலுமாக அழிக்கும் வகையில், அதன் அடையாளங்களை அகற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
அந்த வகையில் ஜனாதிபதி மாளிகையில் (ராஷ்டிரபதி பவன்) உள்ள பிரிட்டிஷ் கட்டடக் கலைஞர் எட்வின் லுட்யென்ஸ் சிலை அகற்றப்பட்டு, சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் சி.ராஜகோபாலாச்சாரி (ராஜாஜி) சிலை நிறுவப்பட்டு உள்ளது. இந்த ராஜாஜி சிலையை, துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் இன்று ஜனாதிபதி திரவுபதி முர்மு திறந்து வைத்தார்.
மோடி பாராட்டு
அந்த மரபை உடைத் தெறியும் வகையில், நம் நாட்டின் முதல் மற்றும் கடைசி கவர்னர் ஜெனரலாக இருந்த ராஜாஜியின் உருவச்சிலை திறக்கப்படுவதாக பிரதமர் மோடி நேற்று தெரிவித்திருந்தார். இன்று சிலை திறப்புக்கு பின் மோடி வெளியிட்ட பதிவில், 'இது காலனித்துவ மனநிலையின் எச்சங்களை அகற்றும் இந்தியாவின் உறுதியை பிரதிபலிக்கும் பாராட்டத்தக்க முயற்சி. ராஜாஜி ஒரு அறிஞர். சுதந்திரப் போராட்ட வீரர். சிந்தனையாளர். அவரது வாழ்க்கை, நேர்மை, அறிவுக்கூர்மை, தேசத்துக்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பை உள்ளடக்கியதாக இருந்தது' என்று தெரிவித்துள்ளார்.
வருத்தம்
இதற்கிடையே, லுட்யன்ஸ் சிலை அகற்றப்பட்டதற்கு, அவரது கொள்ளுப்பேரனும், எழுத்தாளருமான மேட் ரிட்லி தன் வருத்தத்தை பதிவு செய்துள்ளார்.
தமிழ்நாட்டில் தமிழரல்லாத சிலைகள் அகற்றப்பட்டால் குறைந்தது 1 லட்சம் சிலைகள் அகற்றப்படும் அதில் அண்ணாதுரை, கருணாநிதி, ஈவேரா, காந்தி, நேரு சிலைகள் அடக்கம்
குழந்தாய் இப்போது ஏன் இந்த செயல்பாடு 1 ஒரு பக்கம் தமிழ்நாடு ஜெயலலிதாவின் ஆட்சி மிகச்சிறந்த ஆட்சி என்று பிரதமர் சொல்லுதல் 2 இன்னொரு பக்கம் தமிழ்நாடு ராஜாஜி சிலை லுட்யன்ஸ் சிலைக்கு பதிலாக 3 இன்னொரு பக்கம் திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றணும்: கந்த சஷ்டி கவசம் பாடி அண்ணாமலை வழிபாடு
அங்கிலேயன் கால் கழுவி வாழ்க்கையை நடத்த முனைந்த திராவிடனுக்கு இந்த செய்தி பிடிக்கதெ.
No Please. Rajaji caused lots damage to Tamilnadu supporting anti nationals like DMK evil EVR. Please kindly put other freedom fighters who deserves.
ராஜாஜி அவர்களின் சில செயல்பாட்டில் நமக்கு கருத்து வேறுபாடு இருந்தாலும் காலனி ஆதிக்கத்திற்கு முடிவு கொண்டு வரும் நோக்கில் இதை நாம் மனதார ஏற்போம் ...
இந்தியாவுக்கு சுதந்திரம் கொடுக்காதே, இந்த நாட்டை விட்டு போய் விடாதே என்று தனது முக்கிய சீடருடன் தீர்மானமெல்லாம் போட்டு, கொறஞ்ச பட்சம் எங்க தமிழ் நாட்டையாவது விட்டு போயிடாமல் இங்க மட்டுமாவது ஆட்சி பன்னூண்ணு வெள்ளைக்காரன் பிடித்து கெஞ்சிய ராம்சாமிக்கு ராஷ்ட்ரபதி பவனில் கிஞ்சித்து இடம் கிடையாதா? அநியாயம்.
இது முட்டாள்தனமான பேத்தல். ஆங்கிலேயர் அரசியல்வாதிக்கு படம் வைக்கவில்லை கட்டிடத்தை நிர்மாணித்த பொறியாளருக்குத்தான் மரியாதையை செலுத்தினர்....
அவர்கள் செய்வது அல்ல நீங்கள் செய்வதுதான் ஏகாதிபத்தியம்.
மோடி அவர்களே.. டமில் நாட்டுல தந்தை பெரியார் ன்னு சொல்லி சந்து பொந்து ஒரு இடம் விடாமல் கருப்பு பெயிண்ட் அடிச்ச ஒரு சிலையை நட்டு வச்சிருக்கான்கள். முக்கியமா ஸ்ரீ ரங்கம் கோயில் வாசலில் இந்த சிலை நடப்பட்டு ரொம்ப வருஷமா இருக்கு. முதல்ல அதை அப்புறப்படுத்த உத்தரவு போடுங்க.அதை அப்புடியே நாகப்பட்டினம் பகுதியில் கடலில் தூக்கிப் போட சொல்லுங்க. உஙகளுக்கு ரொம்பவே புண்ணியமா போவும்.
மன்னித்து விடுங்கள்... மனிதனின் கஷ்டம் மனிதனோடு போகட்டும்... கடல் வாழ் உயிரானங்களாவது நன்றாக வாழட்டும்... வாயில்லாத ஜீவண்களுக்கு தீங்கு நினைக்காதீர்கள்...
ராமாயணம் மஹாபாரதம் ஆகியவற்றை தமிழ் மற்றும் இங்கிலீஷ்-யில் எழுதி அவற்றில் கூறிய தர்மத்தின்படி 1967-ல் அண்ணாதுரை யுடன் சேர்ந்து திராவிட மாடல் ஆட்சிக்கு அடித்தளமாக இருந்து ஒரிஜினல் தமிழர்களையும் பிராமணர்களையும் அழித்த மாபெரும் மனிதன்.மேலும்
-
ஜே.என்.யு., பல்கலையில் மாணவர்கள் வன்முறை; கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை
-
தன்னம்பிக்கையின் துருவ நட்சத்திரம் லுாபா
-
நியூயார்க்கில் 150 ஆண்டுகளில் இல்லாத பனிப்புயல் கோரத்தாண்டவம்; அவசரநிலை பிரகடனம்
-
தமிழக அமைச்சரவை கூட்டம்: 46 முதலீடுகளுக்கு ஒப்புதல்
-
அமைச்சர் நேரு மீது வழக்குப்பதிய உத்தரவு: உச்சநீதிமன்றத்தில் அதிமுக எம்பி கேவியட் மனு
-
ஐடிஎப்சி வங்கியில் ரூ.590 கோடி மோசடி: யாரும் தப்ப முடியாது என்கிறார் ஹரியானா முதல்வர்