அமைச்சர் நேரு மீது வழக்குப்பதிய உத்தரவு: உச்சநீதிமன்றத்தில் அதிமுக எம்பி கேவியட் மனு
புதுடில்லி: திமுக அமைச்சர் நேரு மீது வழக்குப்பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத்துறைக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டு உள்ள நிலையில், அவருக்கு எதிராக வழக்கு தொடர்ந்த அதிமுக எம்பி இன்பதுரை உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.
தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு. இவரது சகோதரர்கள் கே.என்.ரவிச்சந்திரன், மணிவண்ணன். இவர்களது வீடுகள், அலுவலகம் உள்ளிட்ட இடங்களில், அமலாக்கத்துறையினர் கடந்த ஆண்டு சோதனை நடத்தினர். அப்போது, காகிதம் மற்றும் மின்னணு வடிவில், 232 பக்கங்கள் கொண்ட ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில், 2024 - -25ம் நிதியாண்டில், உதவி பொறியாளர், இளநிலை பொறியாளர் என, 2,538 பணியிடங்களுக்கு ஆட்கள் நியமிக்கப்பட்டனர். அவர்களில், 150க்கும் மேற்பட்டோர், தலா, 25 லட்சம் முதல், 35 லட்சம் ரூபாய் வரை லஞ்சம் கொடுத்து, பணி பெற்றதற்கான விபரங்கள், சோதனையின் போது அமலாக்கத் துறைக்கு கிடைத்தன. பணி நியமனங்களுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் வரை லஞ்சமாக பெறப்பட்டு உள்ளதால், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யுங்கள் என, தமிழக டி.ஜி.பி.,க்கு அமலாக்கத்துறை தரப்பில் கடந்த ஆண்டு அக்டோபர் 27ல் கடிதம் அனுப்பப்பட்டது. அமலாக்கத் துறையிடம், 232 பக்க ஆவணங்களுடன் கூடிய தகவல்களை பெற்ற மாநில காவல் துறை வழக்கு பதிவு செய்யவில்லை.அந்த ஆதாரங்கள் அடிப்படையில், தமிழக டி.ஜி.பி., வழக்கு பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என, மதுரையைச் சேர்ந்த ஆதிநாராயணன் என்பவரும், லஞ்ச ஒழிப்பு துறை வழக்குப்பதிவு செய்யும்படி, அ.தி.மு.க., - எம்.பி., இன்பதுரையும், சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியே மனுக்கள் தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்களை, விசாரித்த தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு,'' தமிழக அமைச்சர் நேரு கட்டுப்பாட்டில் உள்ள நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில், ஊழல் செய்ததற்கான ஆதாரம் உள்ளது. எனவே, லஞ்ச ஒழிப்புத்துறை உடனடியாக வழக்கு பதிவு செய்து விசாரிக்க வேண்டும்'' என, உத்தரவிட்டது. இதனையடுத்து அமைச்சர் பேரு பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. ஆனால், நான் எந்த தவறும் செய்யவில்லை என நேரு மீண்டும் தெரிவித்து இருந்தார். இதுவரை லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்யவில்லை.
இந்நிலையில், நேருவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவர்களில் ஒருவரான அதிமுக எம்பி இன்பதுரை சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில், சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக நேரு வழக்கு தொடர்ந்தால், தனது வாதத்தை கேட்காமல் எந்த உத்தரவையும் நீதிமன்றம் பிறப்பிக்கக்கூடாதுஎனக்கூறியுள்ளார்.
எண்ணத்தே உத்தரவு..எண்ணத்தே கோர்ட்டு....அட போங்கப்பா..நூறு இருநூறு லஞ்சம் வாங்கினாத்தான் வெழுத்து விடுவானுவ சஸ்பென்ட் அது இதுன்னு தூல் கிளப்புவானுங்க...லஞ்ச ஒழிப்புதுறையும் ரொம்ப கடமையை செய்யும்.
இந்தியாவில் பிறந்தது, முன் பிறவியில் செய்த பாவம்
இந்த இந்திய தேசத்தில் ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன் எல்லாமே சாதாரண மக்கள் இரு சக்கர வாகனத்தில் ஹெல்மெட் போடாதவன் மேல மட்டும் ஒடனே ஸ்பாட் பைன் அல்லது கேஸ் பைலை போடுவானுங்க , கோடி கோடி யா கொள்ள அடிக்கிறவனுக்கு மரியாதை கொடுத்து கார் கதவை தொறந்து விடுவானுங்க இது போன்ற நாட்டுல எங்க நியாயம் ஜெயிக்கும் . அடாவடி காரனுக்கும் கொள்ளை அடிக்கிறவனுக்கும் இந்த இந்தியா சட்டம் எப்போதும் எதுவும் செயல்படாது
மழை நீரில் நனைந்த பட்டாசு தான். தீ பிடிக்கும் ஆனால் வெடிக்காது. எத்தனை பட்டாசுகள் வெடிக்காமல் வெளியே இருக்கிறது.
நல்லவர்களையும் கெட்டார்களாக ஆக்கும்திறமையுள்ள கட்சி அதின் தலைவர் முதல்வர் போதுமே இந்நுமென்ன சாட்சி வேண்டும் இனி உடனே நிராகவே அமைச்சர் நேருவை நாடி வழக்கை தொடரலாம்
நேருவின் தொகுதி வாக்காளர் பெருமக்கள் இச் செய்தி கேட்டு இவ்வளவு திறமையான ஒருவருக்கா தாம் ஓட்டுப் போட்டோம் என ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளனர். எங்கெங்கும் மகிழ்ச்சி வெள்ளம். வரும் தேர்தலிலும் பெருமளவில் வாக்களித்து அவரையே வெறிபெறச்செய்வர் என்பது திண்ணம்.
செந்தில் பாலாஜியாவது கொஞ்ச நாட்கள் சிறைவாசம் அனுபவித்தார். மற்றவர்கள் யாருக்கும் இதுவரை சிறைத்தண்டனை கிடைக்கவில்லை. பிறகு எதற்கு வழக்கு? முடிவு எட்டாத பல அரசியல்வாதிகளின் மீதான வழக்குகள். நீதிமன்றத்தின் நேரம் வீண். நீதித்துறை என்ன செய்கிறது?மேலும்
-
247 முறை வெளிநாடு பயணம், தேசவிரோத சக்திகளுடன் தொடர்பு; ராகுல் மீது பாய்ந்த மத்திய அமைச்சர்
-
அமமுகவுக்கு ராஜ்ய சபா சீட் வேண்டும் என்று கேட்டேனா? டிடிவி தினகரன் பதில்
-
சரிந்தது ஒரு சமரசமற்ற சகாப்தம்
-
நல்லகண்ணு மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்
-
தாய்லாந்தின் 'டைகர் கிங்டம்' பூங்காவில் பரவிய ஆட்கொல்லி வைரஸ்; 2 வாரத்தில் 72 புலிகள் உயிரிழந்த சோகம்
-
இந்திய கம்யூனிஸ்ட் முதுபெரும் தலைவர் நல்லகண்ணு காலமானார்