நியூயார்க்கில் 150 ஆண்டுகளில் இல்லாத பனிப்புயல் கோரத்தாண்டவம்; அவசரநிலை பிரகடனம்
நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் 150 ஆண்டுகளில் இல்லாத அளவு மிக மோசமான பனிப்புயல் தாக்கி வருவதால் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்காவில், நியூயார்க் உட்பட வடகிழக்கு பகுதியில் இருந்து பனிப்புயல் வீசத் தொடங்கியது. இதை கணித்த அந்நாட்டு தேசிய வானிலை மையம், கடுமையான காற்றுடன் அதிக பனியைக் கொட்டும் புயலுக்கான 'ப்ளிசார்டு' எச்சரிக்கையை, 9 ஆண்டுக்குப் பின் விடுத்தது.
பனிப்புயலின் தாக்கத்தால் பல இடங்களில் 3 அடி உயரம் வரை பனி குவிந்துள்ளது. இதையடுத்து நியூயார்க் மற்றும் நியூ ஜெர்சி மாகாணத்தில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அவசர போக்குவரத்து தவிர அனைத்து போக்குவரத்துக்கும் நியூயார்க் மேயர் மம்தானி தடை விதித்துள்ளார்.
கடும் பனிப்பொழிவுடன் தீவிர புயல் வீசுதால் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நியூயார்க்கின் முக்கிய விமான நிலையங்களில் 10,000க்கும் மேற்பட்ட விமான சேவைகள், ரத்து செய்யப்பட்டன. அமெரிக்கா முழுவதும் 13,000க்கும் மேற்பட்ட விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. நியூயார்க் நகரத்தில் பள்ளிகள் மூடப்பட்டன.
வடகிழக்கு அமெரிக்காவில், 3.5 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. பாஸ்டன், மேரிலேன்ட், விர்ஜீனியா உள்ளிட்ட மாகாணங்களிலும் பனிப்புயல் வீசும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது வடகிழக்கு அமெரிக்காவை 150 ஆண்டுகளில் இல்லாத அளவு தாக்கிய பனிப் புயல் என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நியூயார்க் புதிய கவர்னரை இயற்கை ஏற்றுக் கொள்ள வில்லை போல் தெரிகிறதுமேலும்
-
தனியார் பஸ் கட்டணம் உயர்வு விவகாரம் குழுவின் அறிக்கை அரசிடம் சமர்ப்பிப்பு
-
பகல் நேர மின் தடை கிடையாது
-
திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் கோயிலுக்கு பிரதமர் மோடி வருகிறார்: பா.ஜ., ராம சீனிவாசன் பேச்சு
-
காப்பி பேஸ்ட் செய்வது தி.மு.க., தான் கே.பி.முனுசாமி பேட்டி
-
கோடை விடுமுறை பயணம் ரயில்களில் முன்பதிவு துவக்கம்
-
வெள்ளி கிலோவுக்கு ரூ.10,000 உயர்வு