அமமுகவுக்கு ராஜ்ய சபா சீட் வேண்டும் என்று கேட்டேனா? டிடிவி தினகரன் பதில்

நெல்லை; அமமுகவுக்கு ராஜ்யசபா சீட் கேட்கவில்லை என்று அக்கட்சியின் பொதுச் செயலாளராக டிடிவி தினகரன் திட்டவட்டமாக கூறி உள்ளார்.

நெல்லையில் அவர் அளித்த பேட்டி;

தேசிய ஜனநாயக கூட்டணி என்றாலே தேசிய அளவிலான கூட்டணிதான். இந்திய அளவில் பாஜ தலைமையிலான கூட்டணி. தமிழகத்தில் அதிமுக தலைமையில் கூட்டணி அமைந்திருக்கிறது.

இப்போதைய கூட்டணியில் தொகுதிப் பங்கீடு சுமூகமாக நடைபெற்று எங்கள் கூட்டணி வெற்றியை நோக்கிச் செல்ல வேண்டும். எனவே நான் தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்று முடிவு எடுத்துள்ளேன்.

அதன்படி, தொகுதிப் பங்கீட்டில் சுமூக நிலை எட்டப்பட வேண்டும் என்பதற்காகவே, நான் பாஜ வழிகாட்டுதல் பேரில் எங்கள் கட்சிக்கான தொகுதிகளை அதிமுகவுடன் இருந்து பெறுவோம் என்று தான் கூறினேன். வேறு எந்த மனமார்ச்சயமும் இல்லை. ராஜ்ய சபா சீட் வேண்டும் என்று நான் கேட்கவில்லை.

கொஞ்சம் பொறுத்திருங்கள். கவுரவமான தொகுதிகளில் நாங்கள் போட்டியிடுவோம். நியாயமான தொகுதிகளை, எங்களின் தகுதியான வேட்பாளர்களுக்கு நீங்கள் எல்லாம், பாராட்டுகின்ற அளவுக்கு முக்கியமான தொகுதிகளில் போட்டியிட்டு சட்டசபைக்குள் எம்எல்ஏக்களாக செல்வோம்.

இவ்வாறு டிடிவி தினகரன் பேட்டியளித்தார்.

Advertisement