பொக்காபுரம் கோவிலுக்கு அரிசி கொண்டு செல்லும் நிகழ்ச்சி

பந்தலுார்: பொக்காபுரம் மாரியம்மன் கோவிலுக்கு, பூ மற்றும் அரிசி கொண்டு செல்லும் சிறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

நீலகிரியில் பிரசித்தி பெற்ற பொக்காபுரம் மாரியம்மன் கோவில் திருவிழாவிற்கு, பந்தலுார் அருகே தேவாலா ஹட்டி மாதேஸ்வரர் கோவிலில் இருந்து, பாரம்பரியமாக பூ மற்றும் அரிசி கொண்டு செல்லும் நிகழ்வு நடத்தப்பட்டு வருகிறது.

நடப்பாண்டு திருவிழாவிற்கு பொக்காபுரம் ஸ்ரீ மாரியம்மன் மற்றும் மசினகுடி மசினி அம்மன் கோவில் விழாவிற்கு,கோவில் கமிட்டி நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் இணைந்து, பூ மற்றும் அரிசி கொண்டு சென்றனர். இதில், திரளான கிராம மக்கள் பங்கேற்றனர்.

Advertisement