ஆக்கிரமிப்பு விடுதிகள் மீது நடவடிக்கை எடுக்க மனு

குன்னுார்: குன்னுாரில் செயல்படும் விதிமீறிய விடுதிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப் பட்டுள்ளது.

குன்னூர் டென்ட் ஹில் பகுதியை சேர்ந்த தேவராஜ் மாவட்ட கலெக்டருக்கு அனுப்பிய மனு :

குன்னுார் டென்ட் ஹில் ஸ்பென்சர்ஸ் காம்பவுண்ட் பகுதியில் நகராட்சி அனுமதியின்றி விடுதி செயல்பட்டு வருகிறது. பொது நடைபாதையை ஆக்கிரமிப்பு செய்து, கட்டட அனுமதி பெறாமல் சட்டவிரோதமாக விடுதி செயல்படுகிறது. நடைபாதையில் ஆக்கிரமித்து கழிப்பிடமும் கட்டப்பட்டுள்ளது. இது போன்ற விடுதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து பலமுறை புகார் கூறியும் நடவடிக்கை இல்லை. எனவே, இதற்கு தீர்வு கண்டு ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement