திருப்பூர் மருத்துவ கல்லுாரியில் கூடுதலாக 50 இடங்கள்
திருப்பூர்: திருப்பூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் கூடுதலாக 50 மாணவர்களை சேர்க்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
திருப்பூர் அரசு மருத்துவக்கல்லுாரி, கடந்த, 2022 ஜன. 12ல், திறக்கப்பட்டது. ஆண்டுக்கு, 100 பேர் வீதம், 2022 முதல் 400க்கும் அதிகமான மாணவ, மாணவியர் மருத்துவ படிப்பு படித்து வருகின்றனர். முதலாம் ஆண்டு கல்லுாரியில் இணைந்தவர்கள் நடப்பு ஆண்டுடன் படிப்பை நிறைவு செய்து, மருத்துவ செய்முறை பயிற்சிக்கு வர உள்ளனர். இதனால், திருப்பூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், 200க்கும் மேல் உள்ள டாக்டர்களின் எண்ணிக்கை, மாணவர் பயிற்சி டாக்டர்களுடன் சேர்த்து, 300 ஆக உயரும். அடுத்து வரும் ஒவ்வொரு ஆண்டும் இனி, 100 புதிய பயிற்சி டாக்டர்கள் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்குள் வர உள்ளனர்.இந்நிலையில், நாமக்கல், திருவள்ளுர், திருப்பூர் அரசு மருத்துவக் கல்லுாரிகளில் தலா, 50 இடங்களை கூடுதலாக ஒதுக்க, மாநில மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குனரகம் விண்ணப்பித்தது. இதற்கு தேசிய மருத்துவ ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. திருப்பூர் அரசு மருத்துவக் கல்லுாரியில் வரும், 2026 - 2027 கல்வியாண்டில், கூடுதலாக, 50 'சீட்' ஒதுக்கீடு உறுதியாகியுள்ளது; நடப்பாண்டு, 150 எம்.பி.பி.எஸ். மாணவர்கள் இடங்கள் பூர்த்தி செய்யப்பட உள்ளது.
மேலும்
-
ரேபிஸ் பாதிப்பு அச்சம்: மஹாராஷ்டிராவில் வங்கி ஊழியர் தற்கொலை
-
ஸ்ரீநகர் விமான நிலையத்தில் ரூ.1,677 கோடியில் புதிய முனையம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
-
மாணவர்கள் எதிர்காலத்தில் அலட்சிய போக்கு: திமுக அரசு மீது இபிஎஸ் தாக்கு
-
போராட்டம் என்பது இந்தியரின் ஜனநாயக உரிமை: சொல்கிறார் ராகுல்
-
ஈரானில் விமானப்படை ஹெலிகாப்டர் காய்கறி பழங்கள் சந்தையில் கீழே விழுந்து நொறுங்கியது; விபத்தில் 4 பேர் பலி
-
கேரளாவின் புதுப்பெயர் ' கேரளம்': மாற்றம் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல்