கூட்டுறவு பணி நியமனத்தில் அலட்சியம்; தமிழக அரசு மீது அண்ணாமலை காட்டம்
சென்னை: கூட்டுறவுத் துறையில் வேலைக்கு பல இளைஞர்கள் தேர்வெழுதிக் காத்துக் கொண்டிருக்கையில், அதைக் குறித்து எந்தக் கவலையுமின்றி அலட்சிய மனோபாவத்தில் திமுக இருப்பதாக தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டி உள்ளார்.
அவரது அறிக்கை: கூட்டுறவுத் துறையில் மாநில மற்றும் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையங்கள் சார்பாக, கடந்த அக்டோபர் மாதம் நடத்தப்பட்ட தேர்வுகளின் இறுதி பட்டியல், 100 நாட்கள் கடந்தும் வெளியிடப்படாமல் இருப்பதால், கீழ்ப்பாக்கம் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அலுவலகம் முன்பாக, தேர்வுகள் எழுதிய இளைஞர்கள் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
கூட்டுறவுத் துறையில், மாநில அளவிலான தேர்வில், 327 பணியிடங்களிலிருந்து 267 ஆக குறைத்து துரோகம் செய்ததோடு மட்டுமல்லாமல், மாவட்ட அளவிலான 2314 பணியிடங்களுக்காக, பல ஆயிரக்கணக்கான இளைஞர்கள் நம்பிக்கையோடு தேர்வெழுதிக் காத்துக் கொண்டிருக்கையில், அதைக் குறித்து எந்தக் கவலையுமின்றி அலட்சிய மனோபாவத்தில் இருக்கும் திமுக அரசுக்கு, வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இன்று நடைபெறும் அமைதியான அறப்போராட்டம், வெறும் கோரிக்கை மட்டுமல்ல, பல குடும்பங்களின் நியாயத்திற்கான குரல். தகுதியான இளைஞர்களின் எதிர்காலத்தை தாமதப்படுத்தாமல், உடனடியாக இறுதி தேர்வு பட்டியலை வெளியிட வேண்டுமென்றும், கைது செய்யப்பட்ட தேர்வர்களை உடனடியாக விடுவிக்க வேண்டுமென்றும் திமுக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.
திமுக அமைச்சர்கள் தேர்தல் தேதி அறிவிப்பதற்குள் அவசர அவசரமாக எப்படியாவது கல் குவாரிகளுக்கு டெண்டர் விட்டு கமிஷன் பார்க்கணும்னு அந்த வேலையில பிஸியா திரிஞ்சுக்கிட்டு இருக்கானுக இந்த நேரத்துல பிசாத்து கூட்டுறவு பணிகளுக்கு ஆளை எடுக்கணும்னா எப்படி எடுப்பானுக? இவரு வேற நேரம் காலம் தெரியாம நை நைன்னு ஏதையாவது சொல்லிக்கிட்டு கெடக்காரு!மேலும்
-
ரேபிஸ் பாதிப்பு அச்சம்: மஹாராஷ்டிராவில் வங்கி ஊழியர் தற்கொலை
-
ஸ்ரீநகர் விமான நிலையத்தில் ரூ.1,677 கோடியில் புதிய முனையம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
-
மாணவர்கள் எதிர்காலத்தில் அலட்சிய போக்கு: திமுக அரசு மீது இபிஎஸ் தாக்கு
-
போராட்டம் என்பது இந்தியரின் ஜனநாயக உரிமை: சொல்கிறார் ராகுல்
-
ஈரானில் விமானப்படை ஹெலிகாப்டர் காய்கறி பழங்கள் சந்தையில் கீழே விழுந்து நொறுங்கியது; விபத்தில் 4 பேர் பலி
-
கேரளாவின் புதுப்பெயர் ' கேரளம்': மாற்றம் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல்