தனியார் வசமாகும் 26 விமான நிலையங்கள்
புதுடில்லி: நாடு முழுதும் அரசு கட்டுப்பாட்டில் உள்ள 26 விமான நிலையங்களின் இயக்கம் மற்றும் நிர்வாகத்தை, தேசிய நிதி திரட்டும் திட்டம் 2.0வின் கீழ் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.
என்.எம்.பி., எனப்படும் தேசிய நிதி திரட்டும் திட்டத்தை 2021ல் மத்திய அரசு துவக்கியது. இத்திட்டத்தின் நோக்கம், ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள அரசு சொத்துகளை விற்காமல் அவற்றின் மதிப்பை பயன்படுத்தி வருவாய் ஈட்டுவதாகும்.
முதற்கட்ட திட்டத்துக்கு பின் தற்போது இதன் இரண்டாம் கட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் விமான நிலையங்கள், துறைமுகங்கள் உள்ளிட்ட பல சொத்துகள் சேர்க்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், விமான போக்குவரத்து அமைச்சகம் ஒ.எம்.டி.ஏ., எனப்படும் இயக்கம், நிர்வாகம் மற்றும் மேம்பாட்டு ஒப்பந்த அடிப்படையில், 26 விமானங்களை தனியார் வசம் ஒப்படைக்க திட்டமிட்டுள்ளது.
ஒ.எம்.டி.ஏ., ஒப்பந்தத்தின் கீழ், 2006ல் முதன் முதலில் டில்லி மற்றும் மும்பை விமான நிலையங்களில் தனியார் நிறுவனங்கள் அனுமதிக்கப்பட்டன. இந்நிறுவனங்கள் விமான நிலையங்களில், 'செக்- - இன் கவுன்டர்', பயணியர் காத்திருப்பு வளாக பராமரிப்பு, ரன் - வே பராமரிப்பு, கடைகள், உணவகங்கள், நவீன வசதிகள் சேர்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளும்.
விமான நிலைய துறையில், 2026 - 30 வரை, 26 விமான நிலையங்களை தனியார் வசம் வழங்கி, 27,500 கோடி ரூபாய் திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், 14,950 கோடி ரூபாய் விமான நிலையங்களை ஓ.எம்.டி.ஏ., முறையில் குத்தகை விடுவதன் வாயிலாகவும், 12,550 கோடி ரூபாயை பங்கு விற்பனை வாயிலாகவும் திரட்டப்படவுள்ளது.
இந்த 26 விமான நிலையங்கள் பல்வேறு கட்டங்களாக ஏலம் விடப்பட உள்ளன. முதற்கட்டமாக 11 விமான நிலையங்கள் தனியாருக்கு வழங்கப்பட உள்ளன.
அரசு துறைகளின் ஒழுக்கம் இல்லாத தன்மை மற்றும் யூனியன் பிரச்சனைகளால் தனியார் உள்ளே வருகிறது. யூனியன் அல்லக்கைகள் வேலை செய்யாமல் பிரச்சனை செய்வதும், சாதியை காரணம் காட்டி அதிகாரிகளை மிரட்டுவதும், நேர்மையான நபர்கள் பழிவாங்கப்படுவதும், டெண்டர் மூலம் கொள்ளை அடிப்பதும் அரசு துறைகளில் நடக்கிறது. இதற்கு ஒரே தீர்வு தனியார்மயம் தான்.
அரசு தொலை தொடர்பு துறையில் தனக்கு வேண்டியவர்களுக்கு 100 கணக்கான கனெக்க்ஷன் கொடுத்து நடந்த அநியாயங்களை போல தனியார் துறையில் நடக்காது.
பொதுத்துறை என்பது நாட்டிற்கே கேடானது.
தனியார் மயம் தாராள மயம் இந்தியா மாயம் ???
அந்த 11 விமான நிலையங்கள் எது என்று சொல்லவில்லயே.
போட்டி, திறமை வளர்த்தல், மேற்கொண்டு கல்வித்திறனை வளர்த்தல் போன்றவற்றை கண்டாலே, அரசு / பொதுத்துறை ஊழியருக்கு அலர்ஜி. ஒரு சில துறைகள் தவிர, மற்றவை நாட்டுக்கும், நாட்டு மக்களின் வரிக்கும் சுமை கேடு தான். இவற்றை ஒழித்துக்கட்ட வேண்டும். அதுசரி, தனியார் துறையை எதிர்க்கும் எந்த அரசு ஊழியர் / பொதுத்துறை ஊழியர், தனியாரின் சேவை மற்றும் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதில்லை?? அப்போ, உங்களை சும்மா உட்கார வைத்து சம்பளம், சலுகை, விடுமுறை, ஊதியஉயர்வு, போனஸ், பென்சன் கொடுத்து, உங்களுக்கு பொதுமக்கள் வெண்சாமரம் வீசவேண்டுமா ? அந்த காலம் மலையேறிவிட்டது. அரசின் இலவச சலுகைகளுக்கு எதிராக பொதுநல வழக்கு வந்தது போல, நஷ்டத்தில் இயங்கும் பொதுத்துறை / அரசுத்துறைகளை இழுத்து மூட, விரைவில் பொதுநல வழக்கு வரும்.
கோபாலபுரத்தார் மற்றும் அவர்களின் உறவினர்கள் பினாமி பெயரில் செயல்பட வாய்ப்பிருக்கிறது
நல்ல செயல். யாரவது பொது துறை நிறுவனங்கள் வேலை செய்வதை பார்த்து இருக்கிறீர்களா, உதாரணத்துக்கு AIR INDIA பொது துறையில் இருக்கும் பொது எப்படி செயல் பட்டார்கள் என்று பல பேர் அனுபவித்து இருப்பார்கள். இது போக பொதுத்துறை நிறுவனங்கள் பொருள்கள் வாங்கும் பொது அரசியல்வாதிகள் தலை இட்டு தரமில்லா பொருள்களை அதிக விலை கொடுத்து வாங்குவார்கள். பொது துறை நிறுவங்களின் யூனின் லீடர்கள் யூனியன் மெம்பர்கள் புடை சுட வளம் வருவார்கள். அவர்களுக்கு கிடைக்கும் அரச மரியாதை என்ன? அவர்கள் வேலை செய்ய வந்தார்களா இல்லை அதிகாரம் செய்ய வந்தார்களா? பெரும்பாலும் வேலை செய்யாமல் இவர்கள் பென்ஷன் தான் வாங்கிறார்கள். ரோட்டில் வாழும் மக்களிடம் வரி வசூலித்து இவர்களுக்கு கொடுப்பது எதற்கு? இவ்வளவு பெரிய நாட்டை ஆள பொருளாதாரம் ஸ்திரமாக இருக்கணும். உலகில் வல்லமை உள்ள நாடாக இந்திய வளர இது போல் பல செயல்களை செய்யணும். இந்த மோடி செயல் நாட்டை வளர செய்யும்.
சில நேரங்களில் சில செய்திகள் மக்களால் தவறாக பொருள்கொள்ளமுடியும். அதனால் தேவையில்லாத குழப்பங்கள் நேரிடும். இந்த செய்தியும் அப்படிப்பட்டது தான். விமான நிலைய பராமரிப்பு மற்றும் இயக்கப்பணிகள் மட்டுமே தனியாரிடம் குத்தகை அடிப்படையில் விடப்படும் என விரிவான செய்தியையும் ஆனால் தலைப்பில் தனியார் வசமாகும் என தலைப்பிலும் உள்ளது. அரசு என்னவோ விமான நிலையங்களையே தனியாருக்கு விற்கப்போவதுபோல் பொருள்படுகிறது. சில விமான நிலையங்களை தனியாரிடம் குத்தகைக்கு விட்டபிறகுதான் பயணியர் சேவைகள் மேம்பட்டுள்ளது என்பது மறுக்கமுடியாத உண்மை. முற்றிலும் குளிரூட்டப்பட்ட ஹால், இருக்கை வசதிகள், சுத்தமான கழிவறைகள், தெளிவான அறிவிப்புகள், வயதானோருக்கான சேவைகள் என பலவகையில் மேம்பட்டுள்ளது. அரசு நேரிடையாக அவற்றை செய்துகொண்டிருந்தபோது பயணியர் அவதிப்பட்டனர். எனவே இது வரவேற்கவேண்டிய முடிவு என்பதில் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது.
Please do for Chennai immediately. It is very pathetic and most inconvenient airport for passengers who depend upon public transport
கல்வி பாதுகாப்பு மற்றும் மருத்துவம் இதை மட்டுமே அரசு நன்றாக பார்த்துக் கொண்டால் போதும்.மேலும்
-
கடந்த 3 நாட்களில் ரூ.2,000 அதிகரித்த தங்கம் விலை; இன்றும் சவரனுக்கு ரூ.320 உயர்வு
-
இந்தியா- இஸ்ரேல் இடையே வலுவான உறவு; பிரதமர் மோடி மகிழ்ச்சி
-
விஜய்யுடன் பேசுவதை மறுக்கவில்லை; சொல்கிறார் காங்கிரஸ் பொறுப்பாளர் கிரிஷ் ஜோடங்கர்
-
உச்சிப்புளி ரயில் நிலைய நடைமேம்பாலம் சேதம்
-
பரமக்குடி வ.உ.சி., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழா
-
புதிய பஸ் ஸ்டாண்டில் பெயரளவில் குடிநீர் வினியோகம்: மக்கள் பாதிப்பு