கடவுளின் தேசமான கேரளா இனி 'கேரளம்' மத்திய அமைச்சரவை ஒப்புதல்
கேரளாவில் சட்டசபை தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், அம்மாநிலத்தின் பெயரை, 'கேரளம்' என மாற்றுவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மலையாள மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், இம்முடிவு எடுக்கப்பட்டதால் கேரள மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கேரளாவில், மார்க்.கம்யூ., கட்சியை சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், இடதுசாரி ஜனநாயக முன்னணி கூட்டணி ஆட்சி நடக்கிறது.
நாடு சுதந்திரம் பெற்ற காலத்தில் மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. அந்த வகையில், 1956 நவ., 1ல், மலையாள மொழி பேசும் மக்களுக்காக, கேரளா தனி மாநிலமாக உருவாக்கப்பட்டது.
கடந்த 2024 ஜூலையில், கேரள சட்டசபையில், மாநிலத்தின் பெயரை, 'கேரளம்' என மாற்றுவதற்கு ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மலையாளத்தில், 'கேரளம்' என அழைக்கப்படுவதால், அரசியல் சாசனத்தின் முதல் அட்டவணையிலும் மாநிலத்தின் பெயரை, 'கேரளம்' என மாற்றக் கோரி, மத்திய அரசுக்கு வலியுறுத்தப்பட்டது.
இந்நிலையில், டில்லியில் நேற்று, பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடந்தது. பிரதமர் அலுவலகத்தின் புதிய கட்டடமான, 'சேவா தீர்த்'தில் நடந்த முதல் கூட்டம் இது. கூட்டத்தில், கேரள அரசின் தீர்மானம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இறுதியாக, கேரளாவின் பெயரை மலையாள மொழிப்படி, 'கேரளம்' என மாற்ற ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதற்கான திருத்த மசோதா வரும் பார்லி., கூட்டத்தொடரில் அறிமுகம் செய்யப்பட்டு, ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படும்.
அதன்பின், அதிகாரப்பூர்வமாக கேரளாவின் பெயர், 'கேரளம்' என மாற்றப்படும். கேரள சட்டசபை தேர்தலை மனதில் வைத்தே, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
- நமது சிறப்பு நிருபர் -:
மேலும்
-
கடந்த 3 நாட்களில் ரூ.2,000 அதிகரித்த தங்கம் விலை; இன்றும் சவரனுக்கு ரூ.320 உயர்வு
-
இந்தியா- இஸ்ரேல் இடையே வலுவான உறவு; பிரதமர் மோடி மகிழ்ச்சி
-
விஜய்யுடன் பேசுவதை மறுக்கவில்லை; சொல்கிறார் காங்கிரஸ் பொறுப்பாளர் கிரிஷ் ஜோடங்கர்
-
உச்சிப்புளி ரயில் நிலைய நடைமேம்பாலம் சேதம்
-
பரமக்குடி வ.உ.சி., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழா
-
புதிய பஸ் ஸ்டாண்டில் பெயரளவில் குடிநீர் வினியோகம்: மக்கள் பாதிப்பு