அ.தி.மு.க., அறிவித்த ரூ.10,௦௦௦: த.மா.கா., ஆதரவு; தி.மு.க., எதிர்ப்பு
சென்னை: 'ஒவ்வொரு குடும்பத்துக்கும் 10,௦௦௦ ரூபாய், உதவித் தொகை வழங்கப்படும்' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி வெளியிட்ட அறிவிப்புக்கு, த.மா.கா., ஆதரவும், தி.மு.க., எதிர்ப்பும் தெரிவித்துள்ளன.
அதன் விபரம்:
தி.மு.க., மாணவரணி மாநில செயலர் ராஜிவ்காந்தி: பா.ஜ.,வின் கால்களை பிடித்து, கருணை அடிப்படையில், கட்சி நடத்திக் கொண்டிருக்கும் பழனிசாமி, மக்களுக்கு கருணைத் தொகை கொடுக்கப் போகிறாராம்.
உங்களிடம் கருணை வாங்க, நீங்கள் ஒன்றும் மக்களுக்கான எஜமான் இல்லை. பா.ஜ.,வின் தயவில் உயிர் வாழும் அடிமை நீங்கள். உங்களுக்கு பிடித்திருக்கும் இந்த ஆணவத்திற்கு, சுயமரியாதை உணர்வு கொண்ட தமிழக மக்கள், இந்த தேர்தலிலும் மருந்து கொடுப்பர்.
த.மா.கா., தலைவர் ஜி.கே.வாசன்: அனைத்து குடும்பத்திற்கும், கருணைத் தொகையாக, ஒரு முறை 10,௦௦௦ ரூபாய் வழங்கப்படும்.
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த, வேலையில்லாத பட்டதாரி இளைஞர்களுக்கு, மாதந்தோறும் 2,000 ரூபாய் வழங்கப்படும் என்ற அறிவிப்புகள், தமிழக மக்களுக்கு நம்பிக்கை கொடுக்கக் கூடியதாக அமைந்திருக்கின்றன. தே.ஜ., கூட்டணிக்கு நம்பிக்கையை அளித்திருக்கும் அடித்தளமான, இந்த அறிவிப்புகளை வரவேற்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
தேசிய கூட்டணியில் உள்ள கட்சிகளில் தனது கட்சியும் ஒன்று என்பதை சுத்தமாக மறந்து விட்டு தன்னிச்சையாக பழனிச்சாமி அறிவித்த சரமாரியான தேர்தல் வாக்குறுதிகள் அதிர்ச்சியை தருகிறது. இலவசங்களிலும் சலுகைகளிலும் அரசு கஜானாவை காலியாக்கியதாக தி.மு.க.வை அரசியல் கட்சிகள் பொதுவாக தாக்கி வரும் நிலையில் இந்த அறிவிப்பு மத்திய அரசையும் பா.ஜ.க. வையும் மிகவும் சங்கட படுத்தும் செயல். இந்த அறிவிப்புகளில் கூறப்பட்ட எதுவுமே ரசிக்கும்படியாகவோ வரவேற்கதக்கதாகவோ இல்லை. தி.மு.க.வை எதிர்க்க வேண்டும் என அ.தி.மு.க.கூறி விட்டு அதே தவறுகளை பழனிச்சாமி செய்ய துணிந்தால் மக்கள் இரண்டு கூட்டணியை தலைமை ஏற்கும் மூத்த மற்றும் பெரிய கட்சிகள் இரண்டையும் மக்கள் நிராகரிக்க வேண்டும் .மீண்டும் மீண்டும் இந்த இரண்டில் ஒன்றையே ஆதரித்தால் பொருளாதார வீழ்ச்சி அடுத்த ஐந்தாண்டுகளிலும் தொடர்வதை தடுக்க முடியாது.
உலக வங்கியிடம் கடன் வாங்கிக்கூட குடும்பத்துக்கு 10000 கொடுப்பார்கள். ஆனதுதான் ஆகிவிட்டது சிறிது அதிக கடன் என்ற நிலைப்பாடு போல. ஊழல் தீம்க்காவின் கள்ளத்தனங்களில் சம்பாதித்ததை பிடுங்கி பொது மக்களுக்கு கொடுத்தால் ஞாயமுண்டு.
நீங்கள் கொடுத்தால் அது கருணை தொகை இல்லை இல்லை கருணாநிதி தொகை யில்லை கட்சிக்கு தொல்லை அடுத்தவர்கள் கொடுத்தால் அது அடிமைத்தொகை என்னடா இது விளையாட்டாக இருக்கே
ஐயோ பாவம்.தா மா கா .....பத்து பேர் கூட தேறாது .
5 வருடங்கள் நீங்கள் பண்ணிய கொடுமைக்குத் தான் மக்களுக்கு கருணைத் தொகை தராரு. நீ மட்டும் என்ன கருநாநிதி பணத்தையா தந்த கலைஞர் உரிமை தொகைக்கு
பழனிசாமி வாயால் சொல்லுவார் ஒருவருக்கு கூட ஒரு 10,000 ரூபாய் கூட கிடைக்காது. பொய்யான மற்றும் ஏமாற்றும் வாக்குறுதி. EPS ஒரு நம்பர் ஒன் கஞ்சத்தனமான மனிதர். அவருடைய சட்டை பைகள் ஒருபோதும் நிரம்புவதில்லை. அவருடைய சட்டை பைகளில் ரூபாய் நோட்டுகள் கட்டுக் கட்டாக கடந்து செல்லும் ஆனால் அவை எங்கே போகின்றன என்பது யாருக்கும் தெரியாது. பிறகு அவர் எப்படி அனைவருக்கும் 10,000 கொடுப்பார்? ஒருவருக்கு கூட ஒரு 10,000 ரூபாய் கூட கிடைக்காது.