உச்சிப்புளி ரயில் நிலைய  நடைமேம்பாலம் சேதம்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி ரயில் நிலையத்தில் நடை மேம்பாலம் சேதமடைந்துள்ளதால் பயணிகள் அச்சத்துடன் சென்று வருகின்ற னர்.

ராமேஸ்வரம்--மதுரை இடையே இயக்கப்படும் பயணிகள் ரயில்கள் தினமும் உச்சிப்புளி ரயில் நிலையத்தில் நின்று செல்கின்றன.

ரயில் நிலையத்தின் இரு நடை மேடைகளுக்கு எளிதாக சென்று வர நடை மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இவற்றின் படிக்கட்டுகள் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது.

இதனால் பயணிகள் நடை மேம்பாலம் வழியாக செல்வதற்கு பதிலாக தண்டவாளத்தில் இறங்கி ஆபத்தான முறையில் கடந்து செல்கின்றனர். நடை மேம்பாலத்தை மேம்படுத்த ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரயில் பயணிகள் வலியுறுத்தினர்.

Advertisement