புதிய பஸ் ஸ்டாண்டில் பெயரளவில் குடிநீர் வினியோகம்: மக்கள் பாதிப்பு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் நகராட்சி புதிய பஸ் ஸ்டாண்டில் பெயரளவில் செயல்படும் குடிநீர் குழாய்களால் பயணிகள் பாதிக்கப்படுகின்றனர்.

ராமநாதபுரம் புதிய பஸ் ஸ்டாண்டிலிருந்து மதுரை, துாத்துக்குடி, கும்பகோணம், புதுக்கோட்டை ஆகிய வெளி மாவட்டங்கள், உள்ளூர் பகுதிகளுக்கு ஏராளமான பஸ்கள் இயக்கப்படுகின்றன. தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். நகராட்சி சார்பில் பஸ் ஸ்டாண்டின் உட்புறத்தில் குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவை பழுதாகி விடுகிறது.

குடிநீர் சரிவர வருவது இல்லை என புகார் எழுந்துள்ளது. கடைகளில் கூடுதல் விலைக்கு குடிநீர் பாட்டில்களை வாங்கி பயணிகள் சிரமப்படுகின்றனர்.ஆகையால் ஏழை, எளிய பயணிகள் வசதிக்காக பஸ் ஸ்டாண்டில் பழுதாகியுள்ள குடிநீர் குழாய்களை செப்பனிட்டு 24 மணி நேரமும் குடிநீர் வழங்க நகராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும் என பயணிகள் வலியுறுத்தினர்.----

Advertisement