விஜய்யுடன் பேசுவதை மறுக்கவில்லை; சொல்கிறார் காங்கிரஸ் பொறுப்பாளர் கிரிஷ் ஜோடங்கர்
சென்னை: 'ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொடுத்தால் யார் தான் வேண்டாம் என்பார்கள். உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரப்பகிர்வை கொடுக்க திமுக சம்மதம் அளித்துள்ளது,' என்று காங்கிரஸ் கட்சியின் தமிழக பொறுப்பாளர் கிரிஷ் ஜோடங்கர் தெரிவித்துள்ளார்.
நேர்காணல் ஒன்றில் அவர் பேசியதாவது; திமுக இன்னும் பேச்சுவார்த்தைக்காக அழைக்கவில்லை. அதிகாரப்பூர்வமான பேச்சுவார்த்தையை நடத்த நாங்கள் காத்திருக்கிறோம். காங்கிரஸ் என்ன எதிர்பார்க்கிறது என்பது பேச்சுவார்த்தை தொடங்கியவுடன் அனைவருக்கும். நாங்கள் என்ன கேட்கிறோம், அவர்கள் என்ன தருகிறார்கள் என்பதை பிறகு நாங்கள் கூறுவோம்.
சுமூகமான ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதற்காகவே, திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முன்பாக எம்பி கனிமொழியுடனான சந்திப்பு நடந்தது. அவர் எங்கள் கட்சி தலைவர்களுடன் தொடர்ந்து பேசி வருகிறார். நாங்கள் எங்களின் எதிர்பார்ப்புகளை அவரிடம் எடுத்துக் கூறியுள்ளோம்.
அதிகாரப் பகிர்வு
அண்மையில் எங்கள் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது, கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. எங்களின் பேச்சுவார்த்தை இன்னும் முடியவில்லை. தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. மாநகராட்சி, பஞ்சாயத்து போன்ற உள்ளாட்சி அமைப்புகளில் அதிகாரப் பகிர்வு குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. உள்ளாட்சி அமைப்புகளில் அதிகாரத்தை பகிர்வதில் திமுக சம்மதம் தெரிவித்துள்ளது. இருப்பினும், எங்களின் முக்கிய நோக்கமே தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது தான்.
ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொடுத்தால் யார் தான் வேண்டாம் என்பார்கள். நாங்கள் ஒரு அரசியல் கட்சி, தொண்டு நிறுவனத்தை நடத்தவில்லை. ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் ஒரு விருப்பம் இருக்கும். ஆனால், கூட்டணி ஆட்சி கலாசாரம் என்பது தமிழகத்தில் இல்லை என்று முதல்வர் கூறியுள்ளார். அரசியலில் எதையும் உங்களால் நிராகரிக்க முடியாது. இது அடிமட்டத்தில் இருந்து வந்த விருப்பங்கள். எனவே, இதனை கோரிக்கையாக நாங்கள் முன்வைக்க வேண்டும்.
விஜயுடன் தொடர்பு
ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் ஏதேனும் ஒரு காரணம் அல்லது விருப்பத்திற்காக உருவாக்கப்படும். அந்தக் கட்சியை ஏற்றுக்கொள்ளலாமா? என்பதை மக்கள் தான் தேர்வு செய்வார்கள். தேர்தல் தான் முடிவு செய்யும். 40 வயதுக்குட்பட்டவர்கள் மத்தியில் தவெகவுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இது கண்டிப்பாக தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது தான் எங்களின் கவலையாக உள்ளது.
தவெக வெளிப்படையாகவே காங்கிரசுக்கு அழைப்பு விடுத்துள்ளது. அவர்கள் எங்களுடன் கூட்டணி வைக்க தயாராக இருக்கிறார்கள். இதன் மூலம் எங்கள் கட்சி அடிமட்ட அளவில் வலுப்பெற்று இருப்பது வெளிப்படுகிறது. விஜயுடன் பேசுவதை மறுக்கவில்லை. அரசியலில் ஒவ்வொருவரிடமும் நீங்கள் பேசி தொடர்பில் இருப்பதை தவிர்க்க முடியாது. எதிரியாக இருந்தாலும் அவர்களுடன் தொடர்பில் இருக்க வேண்டிய கட்டாயம் இருக்கும். நிகழ்ச்சிகளில் அதிமுக தலைவர்களை சந்திக்கிறோம், நலம் விசாரித்து கொள்கிறோம்.
வருத்தமா?
திமுக பேச்சுவார்த்தை நடத்த தாமதிப்பதால் எங்களுக்கு எந்த வருத்தமும் இல்லை. காங்கிரஸ் 140 ஆண்டு கால பழமை வாய்ந்த கட்சி. நிறைய ஏற்ற, இறக்கங்களை சந்தித்து இருக்கிறோம். இருப்பினும், பேச்சுவார்த்தை விரைவாக தொடங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எங்களிடம் உள்ளது. ஏனெனில், தொகுதிகளை அடையாளம் காண வேண்டும், வேட்பாளர்களை இறுதி செய்ய வேண்டும், பிரசாரம் மேற்கொள்வதற்கு எல்லாம் அவகாசம் தேவைப்படுகிறது. கடைசி நிமிடத்தில் அவர்கள் கொடுப்பதை பெற்றுக் கொண்டு வரும் நிலையை நாங்கள் விரும்பவில்லை. பீஹார் மற்றும் மஹாராஷ்டிரா தேர்தல்களிலேயே நாங்கள் இதனை பார்த்து விட்டோம். இதன் காரணமாகவே, முன்கூட்டியே ஆயத்தமாக வேண்டும் என்று நினைக்கிறோம்.
தமிழக அரசியலை புரிந்து கொண்டு, அதற்கேற்றவாறு செயல்பட்டால் வெற்றி பெற முடியும். காங்கிரசுக்கு 12 முதல் 20 சதவித ஓட்டுகள் உள்ளன. நாங்கள் 22 ஆயிரம் கிராமக் கமிட்டிகளை அமைத்துள்ளோம்.மேலும், அதனை விரிவுபடுத்தி வருகிறோம். அதேபோல, 63 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பூத் கமிட்டி நிர்வாகிகள் உள்ளனர். தமிழகம் முழுவதும் ராகுலுக்கு அதிக ஆதரவு இருப்பதை கணிப்புகள் சொல்லுகின்றன. இங்கு காந்தி குடும்பத்தினருடன் உணர்வுபூர்வமான தொடர்பு இருக்கிறது. காமராஜரின் மரபு இன்னும் வலுவாக உள்ளது.
பலமான கட்சி
காங்கிரஸ் கட்சியில் இருக்கும் அனைவரின் ஜனநாயகக் கருத்துக்களுக்கு மதிப்பு அளிக்கப்படுகிறது. கடந்த தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டதால், திமுக தலைமையுடன் எங்களின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை நல்ல உறவில் இருக்கிறார். இதற்காக, தலைவரை யாரும் விமர்சிக்கக் கூடாது. நாங்கள் ஏன் திமுகவுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்?
தமிழகத்தில் காங்கிரசுக்கு நல்ல காலம் வரும். 58 ஆண்டுகள் ஆட்சியில் இல்லாத நிலையிலும், எங்களின் கட்சியில் இன்னும் வலுவான தொண்டர்கள் இருக்கின்றனர். 234 தொகுதிகளில் 5000 விருப்பமனுக்கள் வந்துள்ளன. இதுவே எங்கள் கட்சியின் பலத்தை காட்டுகிறது, இவ்வாறு அவர் கூறினார்.
ஓடி வாங்க ஓடி வாங்க எல்லா க உ பீஸ் மண் வரை முறை இல்லாமல் கதறலாம் இன்னிக்கு கதறல் கிரவுண்ட் ஓபன் டு ஆல் க உ பீஸ்.
சோடங்கரே பிச்சு உதர்ரீங்க. பெஸ்ட் ஆஃப் லக்.
காங்கிரஸ் விஜய்யை ஒரு துருப்புச் சீட்டாக பயன்படுத்துகிறது. இவர்கள் திமுகவை விட்டு விலக மாட்டார்கள் ஆனால் விஜய்யை பயன்படுத்தி அதிக சீட்டுகளும் தேர்தலுக்கான ஒரு பெரிய நிதியையும் திமுகவிடமிருந்து கறக்க திட்டம் போடுகிறார்கள் இதைத் தெரிந்து தான் திமுக இவர்களை தள்ளி வைத்திருக்கிறது
கான்+கிராஸ் அப்புடி திட்டம் போட்டால் கரீட்டுதான். திருட்டு தீயமுக காரனுங்க கான்+கிராஸ்க்கு பொட்டி குடுத்தாலும் தப்பில்லை. அவனுங்க பேரை சொல்லிதானே இவனுங்க பகல் கொள்ளை அடிச்சானுங்க. 41 ஸீட் கதையை பாக்கத்தானே போறோம்.
ஆஹா ஆஹா காங்கிரசுக்கு கோடிக்கான தொண்டர்கள் தமிழகத்திலேயே இருக்கிறார்கள் இவர்கள் ஏன் கூட்டணி சேர வேண்டும் தனித்து நின்றே ஆட்சியைப் பிடிக்கலாம்.
கிரகம் பிடிச்சவனுக. சும்மா பங்கு ஙூங்குன்னு தொங்குரானுக. கடேசியிலே சங்குதான் கிடைக்கும். எங்க தளபதி ஒதுக்கி தள்ளரதை வாங்கிட்டு ஓரமா உகாருங்க.
எந்த கட்சியாவது டாஸ்மாகை முடிவிடுவோம் என்று சொல்கிறானா ?
நீங்க கேக்கறத விட அதிகமாவே கொடுப்பாரு ஜோசேப்பு அப்புறம் ஏன் இப்படி லேட் லேட் டுன்னு கூவுற தா வே க ல சேர்ந்தா உடனே வேலையே ஆரம்பிக்கலாமே சும்மா இப்டி உதார் உட்டு கடைசீல ஒன்னும் இல்லாம போப் போற
எவன் கூப்டாலும் போடுயிவ...? தராதரம் தெரியாத? தமிழ்நாட்ல இந்தாளு பின்னாடி ஒளிஞ்சிட்டிருக்கிறதால, தப்பிச்சீங்க...? இல்லென்னா.... டில்லி கதைதான் இங்கேயும்...?
22 ஆயிரம் கிராம கமிட்டியா.? 1 லட்சம் கிளை ஒரு கிளைக்கு 10 நிர்வாகிகள், 4000 ஒன்றிய, நகர, பேரூர் கொண்ட அமைப்புதான் திமுக? ஓகே...?
அதெல்லாம் சரி கிடா எப்போ வெட்டுவாங்க ??மேலும்
-
அமமுகவுக்கு ராஜ்ய சபா சீட் வேண்டும் என்று கேட்டேனா? டிடிவி தினகரன் பதில்
-
சரிந்தது ஒரு சமரசமற்ற சகாப்தம்
-
நல்லகண்ணு மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்
-
தாய்லாந்தின் 'டைகர் கிங்டம்' பூங்காவில் பரவிய ஆட்கொல்லி வைரஸ்; 2 வாரத்தில் 72 புலிகள் உயிரிழந்த சோகம்
-
இந்திய கம்யூனிஸ்ட் முதுபெரும் தலைவர் நல்லகண்ணு காலமானார்
-
இலவச திட்டங்கள் தொடர்பான வழக்கு; தேர்தலுக்கு பிறகு விசாரிக்கலாம் என்கிறது உச்சநீதிமன்றம்