இந்தியா- இஸ்ரேல் இடையே வலுவான உறவு; பிரதமர் மோடி மகிழ்ச்சி
புதுடில்லி: இந்தியா- இஸ்ரேல் இடையே வலுவான உறவு உள்ளது என பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார்.
இஸ்ரேலுக்கு அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அழைப்பின் பேரில், பாதுகாப்பு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மற்றும் வர்த்தக உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளுக்கு இடையே உறவை வலுப்படுத்தும் நோக்கில் இரண்டு நாட்கள் அரசு முறை பயணமாக
இன்று பிரதமர் மோடி டில்லியில் இருந்து புறப்பட்டு சென்றார்.
இந்தியா, இஸ்ரேல் இடையே நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வது இந்த பயணத்தின் முக்கிய இலக்காகும். 2017ம் ஆண்டு இஸ்ரேல் சென்ற முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையை மோடி பெற்றிருந்தார்.
அதன் பின்னர் கிட்டத்தட்ட 9 ஆண்டுகள் கழித்து இஸ்ரேலுக்கு பயணிப்பது சர்வதேச நாடுகள் மத்தியில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது. இஸ்ரேல் பார்லிமென்டில் பிரதமர் மோடி உரையாற்ற இருக்கிறார். இரு நாடுகளும் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இஸ்ரேல் பயணம் குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது: எனது அன்பு நண்பர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அழைப்பின் பேரில், இரண்டு நாட்களுக்கு இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொள்கிறேன். இந்தியாவும் இஸ்ரேலும் ஒரு வலுவான உறவைக் கொண்டுள்ளது. இது சமீபத்திய ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி மற்றும் சுறுசுறுப்பைக் கண்டுள்ளது.
பிரதமர் நெதன்யாகுவுடன் எனது கலந்துரையாடல்களை எதிர்நோக்குகிறேன்.
இஸ்ரேல் பார்லிமென்டில் உரையாற்றும் முதல் இந்தியப் பிரதமராகும் பெருமை எனக்குக் கிடைக்கும். நீண்ட காலமாக இந்தியா-இஸ்ரேல் நட்பை வளர்த்து வரும் இந்திய புலம்பெயர்ந்தோருடன் தொடர்புகொள்வதை நான் எதிர்நோக்குகிறேன். எனது இஸ்ரேல் பயணம் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேலும் பலப்படுத்தும். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.
வாசகர் கருத்து (5)
Rathna - Connecticut,இந்தியா
25 பிப்,2026 - 11:25 Report Abuse
இஸ்ரேலில் நடந்த தீவிரவாத அநியாயங்களை தெரிந்து கொள்ள NOVA இஸ்ரேல் என்ற திரைப்படம் பாருங்கள். தீவிரவாதத்தை அடக்க இஸ்ரேலுடன் நல்ல நட்பு தேவை. சிறந்த ஆயுதங்களை ராணுவ வீரர்களுக்கு, போலிஸ்க்கு வழங்குவது அவசியம் 0
0
Reply
Moorthy - ,இந்தியா
25 பிப்,2026 - 11:07 Report Abuse
இஸ்ரேல் தற்போது ஒரு தனி நாடே அல்ல அமெரிக்காவின் 52வது மாகாணம், அவ்வளவே... தாய் தன் குட்டியை விட்டு ஆழம் பார்ப்பது போல் அமெரிக்கா, ஒரு நாட்டை தாக்கும் முன் இஸ்ரேல் மூலம் சிறு தாக்குதலை நடத்தும்... 0
0
Thravisham - Bangalorw,இந்தியா
25 பிப்,2026 - 12:22Report Abuse
உமக்கென்ன கவலை? 0
0
Kumar Kumzi - ,இந்தியா
25 பிப்,2026 - 12:50Report Abuse
டாஸ்மாக் நாட்டை ஆள்வதே ... 0
0
Reply
Marai Nayagan - Chennai,இந்தியா
25 பிப்,2026 - 10:34 Report Abuse
கோவை குண்டு வெடிப்பு இல்லை....சிலிண்டர் வெடிப்பு அப்படின்னு சொல்ல வேண்டும். இல்லன்னா சிறு பான்மை ஓட்டு போயிடும்...ஈவேரா சொன்னா மாதிரி திமுக ஓட்டுக்காக காசுக்காக எதுவும் செய்யும் 0
0
Reply
மேலும்
-
அமமுகவுக்கு ராஜ்ய சபா சீட் வேண்டும் என்று கேட்டேனா? டிடிவி தினகரன் பதில்
-
சரிந்தது ஒரு சமரசமற்ற சகாப்தம்
-
நல்லகண்ணு மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்
-
தாய்லாந்தின் 'டைகர் கிங்டம்' பூங்காவில் பரவிய ஆட்கொல்லி வைரஸ்; 2 வாரத்தில் 72 புலிகள் உயிரிழந்த சோகம்
-
இந்திய கம்யூனிஸ்ட் முதுபெரும் தலைவர் நல்லகண்ணு காலமானார்
-
இலவச திட்டங்கள் தொடர்பான வழக்கு; தேர்தலுக்கு பிறகு விசாரிக்கலாம் என்கிறது உச்சநீதிமன்றம்
Advertisement
Advertisement