மினி வேன் கவிழ்ந்து 16 பேர் படுகாயம்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே டாடா ஏஸ் மினி வேன் கவிழ்ந்து கோவில் திருவிழாவிற்கு சென்ற 16 பேர் படுகாயமடைந்தனர்.
கள்ளக்குறிச்சி அடுத்த சித்தலுார் பெரியநாயகி அம்மன் கோவிலில் மாசி மாத தேர் திருவிழா நேற்று நடந்தது. விழாவிற்கு புக்கிரவாரி, சிறுமங்கலம் கிராமத்தை 16க்கும் மேற்பட்டோர் நேற்று மாலை 12 மணியளவில் டாடா ஏஸ் மினி வேனில் சென்றனர். வாகனத்தை சிறுமங்கலம் கிராமத்தை சேர்ந்த டிரைவர் மகாலிங்கம் மகன் மணிவேல், 27; ஓட்டிச் சென்றார்.
பொரசக்குறிச்சி அருகே சென்றபோது மினிவேன் டிரைவரின் கட்டுபாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது. இதில் வாகனத்தில் வந்த மாயக்கண்ணன், கண்ணன், பிரபாதேவி, பிரதீபா, ரங்கநாதன், சதிஷ்குமார், சம்பத்குமார், மாதவன், விஜயலட்சுமி, செல்வி, ஜெயக்கொடி, பவித்ரன், பவதரணி, ரித்திக், சாதனா, கருப்பாயி உள்ளிட்ட 16 பேர் காயமடைந்தனர்.
உடன் அப்பகுதி மக்கள் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மரு த்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவலறிந்த செந்தில்குமார் எம்.எல்.ஏ. , அரசு மருத்துவமனைக்கு சென்று விபத்தில் காயமடைந்த சிகிச்சை பெற்று வந்தவர்களை சந்தித்து விசாரித்தார். பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்குமாறு டாக்டர்களிடம் அறிவுறுத்தினார். இது தொடர்பாக வரஞ்சரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மேலும்
-
கடந்த 3 நாட்களில் ரூ.2,000 அதிகரித்த தங்கம் விலை; இன்றும் சவரனுக்கு ரூ.320 உயர்வு
-
இந்தியா- இஸ்ரேல் இடையே வலுவான உறவு; பிரதமர் மோடி மகிழ்ச்சி
-
விஜய்யுடன் பேசுவதை மறுக்கவில்லை; சொல்கிறார் காங்கிரஸ் பொறுப்பாளர் கிரிஷ் ஜோடங்கர்
-
உச்சிப்புளி ரயில் நிலைய நடைமேம்பாலம் சேதம்
-
பரமக்குடி வ.உ.சி., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழா
-
புதிய பஸ் ஸ்டாண்டில் பெயரளவில் குடிநீர் வினியோகம்: மக்கள் பாதிப்பு