சிறுமி பாலியல் பலாத்காரம் கூலி தொழிலாளி கைது

திருக்கோவிலுார்: சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த கூலி தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

திருக்கோவிலுார் அடுத்த மேலத்தாழனுார், சின்னசெட்டிபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆழ்வார், 45; மூட்டை துாக்கும் கூலி தொழிலாளி. கடந்த சில மாதத்திற்கு முன்பு, வேலைக்கு சென்ற இடத்தில் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தார்.

இந்நிலையில் சிறுமி வயிறு வலிப்பதாக தனது தாயிடம் கூறியதை அடுத்து மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றார். அப்போது, சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந் தது.

இது குறித்த புகாரின் பேரில் திருக்கோவிலுார் அனைத்து மகளிர் போலீசார் ஆழ்வார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்தனர்.

Advertisement