மகளிர் ஓட்டுக்கு குறிவைக்கும் பா.ஜ.,: ஜெ., பிறந்த நாளில் வரிசைகட்டி வாழ்த்து
சென்னை: முன்னாள் முதல்வரான, மறைந்த ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி முதல் தமிழக பா.ஜ., நிர்வாகிகள் வரை அனைவரும் வாழ்த்து தெரிவித்தனர். இதன் பின்னணியில், தமிழகத்தில் உள்ள மகளிர் ஓட்டுகளை முழுதுமாக பெற, பா.ஜ., வியூகம் வகுத்திருப்பது தெரியவந்துள்ளது.
தமிழகத்தில் மொத்தம் உள்ள 5.67 கோடி வாக்காளர்களில், 2.90 கோடி பேர் பெண்கள். இதனால், மகளிர் ஓட்டுகளை கவர, தி.மு.க., - அ.தி.மு.க., இடையில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இதனால், மகளிர் உரிமைத்தொகை பெறும் 1.31 கோடி பேரின் வங்கி கணக்குகளில், இம்மாதம் முதல் ஏப்., வரை மூன்று மாதங்களுக்கு முன்பணமாக, 3,000 ரூபாய், கோடை கால சிறப்பு தொகையாக, 2,000 ரூபாய் என, 5,000 ரூபாயை தமிழக அரசு கடந்த 13ம் தேதி செலுத்தியது.
அதற்கு போட்டியாக, அ.தி.மு.க., சார்பில் பல வாக்குறுதிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. அ.தி.மு.க., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள பா.ஜ.,வும், ஜெயலலிதா மீது பற்றுள்ள மகளிர் ஓட்டுகளை பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு நேற்று, பிரதமர் நரேந்திர மோடி முதல் தமிழக பா.ஜ., நிர்வாகிகள் வரை பலரும் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.
பிரதமர் மோடியின் வாழ்த்துச் செய்தியில், 'முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, தலைசிறந்த நிர்வாகியாக எண்ணற்ற மக்களின் இதயங்களிலும், மனங்களிலும் இடம்பிடித்துள்ளார். 'தமிழகத்தின் முதல்வர் என்ற முறையில் பெண்களுக்கு அதிகாரம் அளித்தல் குறித்து நிறைய சிந்தித்தார். கருணை, உறுதி என்ற இரு பண்புகளையும் அவர் கொண்டிருந்தார்' என தெரிவித்து உள்ளார்.
இதேபோல், மத்திய அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள், பா.ஜ., தேசிய தலைவர் நிதின் நபின், தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன், மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை உட்பட பலரும் ஜெயலலிதாவை நினைவுகூர்ந்தனர்.
இதுகுறித்து, பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது: ஜெயலலிதா ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு சிறப்பாக இருந்தது. இதனால், ஜெயலலிதா மீது மகளிருக்கு எப்போதும் பாசம் உண்டு. ஜெயலலிதாவும் பிரதமர் மோடியும் சிறந்த நண்பர்களாக இருந்தனர்.
எனவே, ஜெயலலிதாவின் ஓட்டுகளை முழுதுமாக, தேசிய ஜனநாயக கூட்டணிக்கு திருப்பும் வகையில், இனி பா.ஜ.,வின் செயல்பாடு இருக்கும். இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.
@block_Y@
முன்னாள் முதல்வர்கள் உள்ளிட்டோரின் பிறந்த நாள், அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி, சென்னை காமராஜர் சாலையில், உள்ள அவரது சிலைக்கும் புகைப்படத்திற்கும், தமிழக அரசு சார்பில், செய்தித்துறை செயலர் ராஜாராமன், கூடுதல் இயக்குநர் பாஸ்கரன், தலைமைச் செயலக செய்தி தொடர்பு அதிகாரி முத்தமிழ் செல்வன் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.
ஆனால், அ.தி.மு.க.,வில் இருந்து தி.மு.க.,விற்கு சென்று அமைச்சராக உள்ளவர்கள் உட்பட, அமைச்சர்கள் யாரும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. நிகழ்ச்சியை, முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் உள்ளிட்டோர் தவிர்த்து விட்டனர்.block_Y
காங்கிரஸ் இன் சோனியா, பிரியங்கா போல் நாடு முழுதும் அறிமுகமான ஒரு பெண் தலைவர் பிஜேபி இல் இல்லாதது பெரும் குறையே தற்போது நம் கோவை வானதி அவர்கள்தான் அகில இந்திய பிஜேபி மகளிர் அணி தலைவராம் .எனக்கு தெரிந்து வட நாட்டில் இந்தி தெரியாத ஒருவரை தலைவராக எப்போதும் ஏற்க மாட்டார்கள்...
மனசாட்சி இல்லையா உங்களுக்கு ....வாழ்த்து சொன்ன எப்பிடி ஓட்டு விழும் ? நம்ம ஜி டீம் ஒரு முடிவோட தான் இருக்காங்க ...
நீயும் உங்க வூட்ல கேட்டு பாரு.. தெரியும்மேலும்
-
கடந்த 3 நாட்களில் ரூ.2,000 அதிகரித்த தங்கம் விலை; இன்றும் சவரனுக்கு ரூ.320 உயர்வு
-
இந்தியா- இஸ்ரேல் இடையே வலுவான உறவு; பிரதமர் மோடி மகிழ்ச்சி
-
விஜய்யுடன் பேசுவதை மறுக்கவில்லை; சொல்கிறார் காங்கிரஸ் பொறுப்பாளர் கிரிஷ் ஜோடங்கர்
-
உச்சிப்புளி ரயில் நிலைய நடைமேம்பாலம் சேதம்
-
பரமக்குடி வ.உ.சி., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழா
-
புதிய பஸ் ஸ்டாண்டில் பெயரளவில் குடிநீர் வினியோகம்: மக்கள் பாதிப்பு