போதையில் பூச்சி மருந்து குடித்த விவசாயி பலி
கள்ளக்குறிச்சி: சின்னசேலம் அருகே மதுபோதையில் பூச்சி மருந்து குடித்த விவசாயி சிகிச்சை பலனின்றி இறந்தார்.
சின்னசேலம் அடுத்த நைனார்பாளையம் இந்திரா நகர் சேர்ந்தவர் செந்தில்குமார், 41; விவசாயி. மது பழக்கம் உடையவர். கடந்த 21ம் தேதி மாலை 6.30 மணிக்கு மதுபோதையில் வீட்டிற்கு வந்த செந்தில்குமார் திடீரென வயலுக்கு பயன்படுத்தும் பூச்சி கொல்லி மருந்து குடித்தார்.
உடன் அவரை சின்னசேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்து, மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இது குறித்து செந்தில்குமார் மனைவி சத்தியா கொடுத்த புகாரின் பேரில் கீழ்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கடந்த 3 நாட்களில் ரூ.2,000 அதிகரித்த தங்கம் விலை; இன்றும் சவரனுக்கு ரூ.320 உயர்வு
-
இந்தியா- இஸ்ரேல் இடையே வலுவான உறவு; பிரதமர் மோடி மகிழ்ச்சி
-
விஜய்யுடன் பேசுவதை மறுக்கவில்லை; சொல்கிறார் காங்கிரஸ் பொறுப்பாளர் கிரிஷ் ஜோடங்கர்
-
உச்சிப்புளி ரயில் நிலைய நடைமேம்பாலம் சேதம்
-
பரமக்குடி வ.உ.சி., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழா
-
புதிய பஸ் ஸ்டாண்டில் பெயரளவில் குடிநீர் வினியோகம்: மக்கள் பாதிப்பு
Advertisement
Advertisement