இலவச திட்டங்கள் தொடர்பான வழக்கு; தேர்தலுக்கு பிறகு விசாரிக்கலாம் என்கிறது உச்சநீதிமன்றம்
புதுடில்லி: இலவச திட்டங்களை வாக்குறுதிகளாக அறிவிப்பதற்கு தடை விதிக்கக்கோரிய வழக்கின் விசாரணையை, தேர்தலுக்குப் பிறகு விசாரிக்கலாம் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் சார்பாக உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், "தேர்தலுக்கு முன் இலவச திட்டங்களை, அரசியல் கட்சிகள் வாக்குறுதிகளாக அறிவிப்பதால், மாநில அரசுக்கு நிதிச்சுமை ஏற்படுகிறது. இலவச திட்டங்களுக்கான நிதி ஆதாரங்கள் குறித்து அரசியல் கட்சிகள் வெளியிட ஆணையிட வேண்டும். அதுமட்டுமில்லாமல் இலவச வாக்குறுதிகளை அளிப்பதற்கு தடை விதிக்க மத்திய அரசு மற்றும் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும்," என்று மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மனு தலைமை நீதிபதி சூர்யகாந்த் மற்றும் ஜோய்மால்யா பக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, நீதிபதிகள் கூறுகையில், "கேரளாவிலும் சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதால், இதுபோன்ற மனுவை தாக்கல் செய்தனர். தற்போது, இந்த வழக்கை அவசர வழக்காக விசாரணை வேண்டியதில்லை. தேர்தல் முடிந்த பிறகு, இந்த வழக்கை விசாரித்துக் கொள்ளலாம்," என தெரிவித்தனர்.
ஏன் இப்போது விசாரித்தால் ஒரு 5 கிலோ எடை குறைந்து விடுவீர்களா? ஊழலுக்கு ஏன் துணை போகிறீர்கள்.
தேர்தல் முடிந்த பிறகு இந்த கேஸை வாதாடினால் என்ன வாதாட விட்டால் என்ன. ஒரு பயனும் இல்லை
உச்சநீதிமன்றம் இந்தியாவின் சாபக்கேடு, அரசியல்வாதிகளின் அத்தனை அயோக்கிய செயல்களுக்கும் மூலகாரணம் இவர்கள்தான், மிகக்கேவலமான நீதித்துறையால் தான் ஊழல் மிகுந்து நாடு சீரழிந்து கிடக்கிறது
எந்த வருடம் எந்த தேர்தல் முடிந்த பிறகு.. தீர்ப்பு வருது எப்பொழுது..?
என் எதிரில் கத்தியுடன் இருவர் கொலை மிரட்டல் விடுத்து நிற்கின்றனர் என்று போலீஸுக்கு போன் செய்தால் கொலை செய்துவிட்டு ஒடட்டும். நாங்கள் துரத்திச்சென்று பிடித்து விடுவோம் என்பது போல் இருக்கிறது நீதிமன்ற அக்கறை.
ஓ.கே.. அதுக்குள்ள டிஸ்ட்ரிபியூஷன் எல்லாம் கச்சிதமா முடிச்சுவிடலாமே.... அப்புறம் வயசுக்கு வந்தா என்ன வராட்டிதான் என்ன ???
சரிதான். குதிரை போன பின்பு, லாயத்தை பூட்டி என்ன பயன் ??
இவர்களெல்லாம் படித்து விட்டு தான் நீதிபதிகள் ஆயிருக்கிறார்களா காட்டுமிராண்டிகள் அனைத்து நீதிபதிகளின் வீட்டிலும் ஒரே சமயத்தில் ஐடி மற்றும் இ டி ரைடுகள் நடந்தால் கிடைக்கும் பணத்தில் இந்திய தேசத்திற்கே சொக்கத்தக்கத்தில் சுற்றுச்சுவர் எழுப்பி விடலாம்
அலை ஓய்ந்து குளிக்கலாம் என்று கூறுவது போல் இருக்கிறது.தொழிற்சங்க தேர்தலில் இருந்து ஜனாதிபதி தேர்தல் வரை ஏதாவது ஒரு தேர்தல் நடந்து கொண்டு தான் இருக்கிறது.
எப்பொழுது ஒரு நல்ல முடிவு கிடைக்கும் என்று தெரியவில்லை.
அட கண்றாவியே..... , இது என்ன மாதிரி டிசைன்?மேலும்
-
காத்திருப்பு போராட்டம்
-
நிழற்குடை சேதம்
-
மாநில கிரிக்கெட் போட்டி: வெண்கலம் வென்று ராமநாதபுரம் வீரர்கள் சாதனை
-
இன்ஸ்டாகிராமில் 10 கோடி பின்தொடர்பவர்கள்; புதிய சாதனை படைத்தார் பிரதமர் மோடி
-
தி.மு.க., கொடியுடன் வந்த காரை மறித்து அ.தி.மு.க.,வினர் ஆர்ப்பாட்டம் போலீசாருக்கு 'டிமிக்கி'
-
கடலாடி யூனியன் அலுவலகத்தை காலி குடங்களுடன் பெண்கள் முற்றுகை