எப்ஸ்டீன் விவகாரத்தில் மன்னிப்பு கோரினார் பில்கேட்ஸ்
வாஷிங்டன்: எப்ஸ்டீன் தொடர்பால் ஏற்பட்ட களங்கத்திற்காக கேட்ஸ் தொண்டு நிறுவன ஊழியர்களிடம் மன்னிப்பு கோரியுள்ள மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில்கேட்ஸ், ரஷ்ய பெண்களுடன் இருந்த தொடர்பை ஒப்புக் கொண்டுள்ளார்.
இது தொடர்பாக டவுன்ஹால் கூட்டம் ஒன்றில், தொண்டு நிறுவனத்தின் ஊழியர்கள் மத்தியில் பில்கேட்ஸ் பேசியதாக அமெரிக்க ஊடகங்கள் வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டு உள்ளதாவது: எப்ஸ்டீன் உடனான எனது தொடர்பு பெரிய தவறு. இது நன்கொடை அமைப்பின் நற்பெயர் குறித்து சந்தேகங்களை எழுப்பிவிட்டது. நான் எந்த தவறையும் செய்யவில்லை. சட்டவிரோதமாக எதையும் பார்க்கவில்லை. அவரை சுற்றி இருந்த பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பெண்களுடன் நேரத்தை செலவிடவில்லை என்பதை தெளிவாக கூறிக்கொள்கிறேன்.
முகங்கள் மறைக்கப்பட்ட நிலையில் உள்ள பெண்களுடன் எடுக்கப்பட்ட புகைப்படங்கள், கூட்டங்களுக்கு பிறகு எப்ஸ்டீன் வேண்டுகோளின்படி அவர்களது உதவியாளர்களுடன் எடுக்கப்பட்டது. எப்ஸ்டீன் உடனான கடந்த கால தொடர்பு காரணமாக நற்பெயருக்கு ஏற்பட்ட களங்கத்திற்காகவும், நான் செய்த தவறு காரணமாக இதில் தொடர்புபடுத்தப்பட்ட மக்களிடமும் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு பில்கேட்ஸ் கூறியதாக அந்த செய்தியில் கூறப்பட்டு உள்ளது.
ஒப்புதல்
மேலும், ரஷ்ய பெண்களுடன் உள்ள தொடர்பை பில்கேட்ஸ் ஒப்புக் கொண்டு உள்ளார். விளையாட்டு நிகழ்ச்சி மூலம் தொடர்பு கொண்ட ரஷ்ய வீராங்கனை மற்றும் வணிகம் சார்ந்த நிகழ்ச்சி வாயிலாக அறிமுகமான ரஷ்யாவை சேர்ந்த அணு இயற்பியலாளர் ஒருவருடன் தொடர்பு ஏற்பட்டது. அதேநேரத்தில் எப்ஸ்டீனால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், இந்த தொடர்புக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இவ்வாறு பில்கேட்ஸ் கூறியுள்ளார்.
யார் இந்த எப்ஸ்டீன்
அமெரிக்காவைச் சேர்ந்த ஜெப்ரி எப்ஸ்டீன், பாலியல் குற்றவாளி. 'பைனான்சியர்' மட்டுமின்றி பெரிய பணக்காரர். தனக்குச் சொந்தமான உல்லாசத்தீவில், இளம்பெண்கள் மற்றும் சிறுமியரை, பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய குற்றச்சாட்டுக்காக, 2008ல் அவர் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில், 18 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து, புளோரிடா சிறையில் அடைக்கப்பட்டார். ஏறத்தாழ, 10 ஆண்டுகளுக்கு பின், 2019 ஜூலை 6ல் மீண்டும் பாலியல் குற்றச்சாட்டில், எப்ஸ்டீன் கைதாகி நியூயார்க் சிறையில் இருந்த போது, ஆக., 10ல் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் இறந்த பின், அவரோடு தொடர்பில் இருந்த நபர்களின் பெயர்கள் மற்றும் விபரங்கள் அடங்கிய கோப்புகள் நீதிமன்ற உத்தரவுப்படி அவ்வப்போது வெளியிடப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், வெளியான கோப்புகளில், மைக்ரோசாப்ட் நிறுவனரும், பிரபல தொழிலதிபருமான பில் கேட்ஸ் குறித்து அதிர்ச்சி தகவல்கள் இடம் பெற்றுள்ளன. கடந்த 2013 ஜூலை 18ல், எப்ஸ்டீன் தனக்கு தானே அனுப்பிக் கொண்ட இ - மெயிலில் பில் கேட்ஸ் குறித்த தகவல்களை பகிர்ந்துள்ளார்.
அதன்படி, ரஷ்ய பெண்களுடன் பில் கேட்ஸ் பாலியல் உறவு கொண்டதால் அவருக்கு பால்வினை நோய் ஏற்பட்டதாக அதில் தெரிவித்துள்ளார். அந்த தொற்றை குணப்படுத்தும் ஆன்டிபயாடிக் மருந்துகளை தரும்படி பில் கேட்ஸ் கேட்டதாகவும், அதை தன் அப்போதைய மனைவி மெலிண்டாவுக்கு, அவருக்கு தெரியாமல் ரகசியமாக கொடுக்க திட்டமிட்டதாகவும் எப்ஸ்டீன் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தன்னுடைய அந்தரங்க தொடர்புகள் குறித்த விபரங்களை அழிக்கும்படி பில் கேட்ஸ் வற்புறுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த குற்றச்சாட்டுகளை பில் கேட்ஸ் திட்டவட்டமாக மறுத்து இருந்தார்.
மனசாட்சிப்படி ஒருத்தனும் நல்லவன் இல்லை.
யாரை தான் நம்புவதோமேலும்
-
சைவம், வைணவம் குறித்து ஆபாச பேச்சு; மார்ச் 24ல் பொன்முடி ஆஜராக உத்தரவு
-
பிரேசில் கொட்டி தீர்க்கும் கனமழை: நிலச்சரிவில் சிக்கி 25 பேர் பலி
-
அமெரிக்காவில் இனி சட்டவிரோத குடியேறிகளுக்கு டிரைவிங் லைசென்ஸ் கிடைக்காது!
-
எங்கும் ஊழல்; எதிலும் ஊழல்: பாகிஸ்தான் ஐகோர்ட்டில் 5 ஆண்டாக பணியாற்றிய போலி நீதிபதி நீக்கம்
-
கேரளா ரயில்வே ஸ்டேஷனில் பெண் அமைச்சர் மீது தாக்குதல்; இளைஞர் காங். அத்துமீறல்
-
வடகிழக்கு மாநில பெண்களை அவதூறாக பேசிய தம்பதி சிறையில் அடைப்பு; இனரீதியான துஷ்பிரயோகத்திற்கு கடும் கண்டனம்