சைவம், வைணவம் குறித்து இழிவு பேச்சு: மார்ச் 24ல் பொன்முடி ஆஜராக உத்தரவு
சென்னை: சைவம், வைணவ சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்து இழிவாக பேசியது தொடர்பான வழக்கில், தி.மு.க., முன்னாள் அமைச்சர் பொன்முடி, மார்ச் 24ம் தேதி நேரில் ஆஜராக, சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில், கடந்த ஆண்டு ஏப்., 6ல் நடந்த கூட்டத்தில் பங்கேற்ற பொன்முடி, சைவம், வைணவ சமயங்கள் மற்றும் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசினார்.
அவரது அந்தப் பேச்சுக்கு, பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். பின், தி.மு.க., துணை பொதுச்செயலர் பதவியில் இருந்து பொன்முடி நீக்கப்பட்டார்; அமைச்சர் பதவியும் பறிபோனது.
இழிவு பேச்சு தொடர்பாக, சென்னை மாநகராட்சி 134வது வார்டு பா.ஜ., கவுன்சிலர் உமா ஆனந்தன் சார்பில், வழக்கறிஞர்கள் எஸ்.மகேஷ், கே.பிரேம் ஆனந்த் ஆகியோர், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு ஜூனில், தனிநபர் புகார் மனு தாக்கல் செய்தனர்.
மனுவில், 'வெறுப்பு பேச்சு பேசிய முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிரான புகாரை விசாரித்து, மத ரீதியாக வெறுப்புணர்வை ஏற்படுத்துதல், மத உணர்வுகளை புண்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ், பொன்முடியை தண்டிக்க வேண்டும்' என குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த புகார் மனு, எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் மீதான வழக்குகளை விசாரிக்க நியமிக்கப்பட்ட, ஜார்ஜ் டவுன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த புகார் மனுவை, மூன்றாவது மாஜிஸ்திரேட் சி.சுந்தரபாண்டியன் விசாரித்தார்.
அப்போது, 'பொன்முடியின் பேச்சுகள், வெறுப்பு பேச்சு வரம்பிற்குள் வருகின்றன. அவருக்கு எதிரான புகாரை, விசாரணைக்கு ஏற்பதற்கு முகாந்திரம் உள்ளது' என கூறி, மார்ச் 24ம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி, பொன்முடிக்கு 'சம்மன்' அனுப்ப உத்தரவிட்டுள்ளார்.
இதன் காரணமாக, விசாரணை நீதிமன்றத்தில் மார்ச் 24ல் நேரில் ஆஜராக வேண்டிய சூழல் பொன்முடிக்கு ஏற்பட்டு உள்ளது.
ஒன்னும் ஆஹ போவது இல்லை கூட்டு களவாணிகள் மார்ச் வரை ஏன் வெயிட் பண்ணனும் இப்புடியே கேஸ் இழுத்துக்கொண்டு போகும் நல்ல entertainment வெட்கப்படணும்
இவனுக்கு சிறை தண்டனையோ, அபாரதமோ சரிப்பட்டு வராது, ....
தமிழக மக்களுக்கு இதனால் எந்த நஷ்டமும் இல்லை அதனால் இவர் பேசியது குறித்து நமக்கு தேவையும் இல்லை நமக்கு கவலையும் இல்லை
எந்தக் கோர்ட்டும் இவர் போன்றவர்களுக்கு எந்தத் தண்டனையும் கொடுக்கப் போவதில்லை. இவரை மீண்டும் கோர்ட்டில் ஆஜராக சொல்வது படு மோசமாக இவர் பேசியதை மீண்டும் ரீவைன்ட் பண்ணி அது மீண்டும் ஊடகங்களில் வந்து மீண்டும் ஒரு முறை பெண்மையை களங்கப் படுத்த வா?
சாவர்கர் பற்றி பேசி புளங்காகிதம் அடையும் வெட்டி உதார் பேர்வழிகள் தான் முதலில் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டார்கள், அது சரி, இவர் வீட்டில் எப்படி? சைவமா இல்லை வைணவமா?
நீங்கள் வோட்டு போடும் தலைவர் தானே நேரா கேட்க வேண்டியதுதானே
ஒருவரின் தராதரம் அவரவர் பேச்சில் வெளி வரும் என்று சும்மாவா சொன்னார்கள்? 70 வருட பயிற்சி வாயில் கட்டுப்படுத்த முடியாமல் வந்து விட்டது.
கோர்ட்டில் இவர் நிமிர்ந்து நிற்பாரா அல்லது ஸாஷ்டாங்கமா படுத்துடுவாரா? படுத்துடுவார் என்றுதான் நான் நினைக்கிறேன் இவரெல்லாம் ஒரு அமைச்சர். தமிழக மக்கள் இவரைபோல ஆட்களையெல்லாம் தேர்ந்தெடுத்தற்கு வெட்கி தலைகுனியவேண்டும்.
Going to courts is waste with Model and its lawless gang.
Like how they did in Deepam case, they will not implement court orders if it is not in their favour.
Also, Judge will face smear campaign including his e and family.
நீதிபதிக்கு மத்திய போலீஸ் பாதுகாப்பு தேவை.
தீயமுகவுக்கு ஓட்டு போட்ட ஒவ்வொரு இந்துவும் தரம்கெட்டவர்கள் என்பது நிதர்சனமான உண்மை.மேலும்
-
ஜம்மு காஷ்மீர் பட்ஜெட் இரு மடங்கு பெரியது; பாகிஸ்தானை வெளுத்து வாங்கிய இந்தியா
-
நீதித்துறை ஊழல் குறித்த பாடத்திற்கு சுப்ரீம் கோர்ட் தடை
-
டில்லி - ஷிம்லா போலீசாரின் மோதல் முடிவுக்கு வந்தது; இளைஞர் காங்கிரசார் 3 பேர் கைது
-
பிரதமரின் தமிழக வருகைக்கு பிறகு அதிமுக உடன் தொகுதி பங்கீடு பேச்சு: நயினார் நாகேந்திரன்
-
தற்செயலாக நடந்த தவறு: நீதித்துறை குறித்த பாடப்புத்தகத்திற்கு மன்னிப்பு கோரியது என்சிஇஆர்டி
-
சபாஹார் துறைமுகத்திற்கு இந்தியா நிதி ஒதுக்காதது ஏமாற்றம்; சொல்கிறது ஈரான்