மாவோயிஸ்ட் கூட்டாளிகள் எங்கே? தேனி, திண்டுக்கல்லில் தேடுதல்
சென்னை: ராணிப்பேட்டை மாவோயிஸ்ட் வசந்த் அளித்த வாக்குமூலத்தின்படி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் அவரது கூட்டாளிகளை, 'கியூ' பிரிவு போலீசார் தேடி வருகின்றனர்.
தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில், மாவோயிஸ்டுகள் நடமாட்டம் உள்ளதா என்பதை கண்காணிக்க, மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன் அடிப்படையில், கேரள மாநில சிறையில் அடைக்கப்பட்டு இருந்த, ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மாவோயிஸ்ட் வசந்த், 37, என்பவரை, நீதிமன்ற காவலில் எடுத்து, தமிழக கியூ பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், வசந்த் கூட்டாளிகள் பதுங்கி இருக்கும் இடம் குறித்து, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில், கியூ பிரிவு போலீசார் தேடுதலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து, அவர்கள் கூறியதாவது:
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன், வசந்த் தலைமையில் மாவோயிஸ்டுகள், 15 பேர் செயல்பாட்டில் இருந்துள்ளனர்.
அவர்களிடம், வெடிகுண்டுகள், அதிநவீன துப்பாக்கிகள் இருந்துள்ளன. தற்போது, ஒன்றிரண்டு பேர் மட்டுமே தமிழகத்தில் உள்ளனர்.
மற்றவர்கள், வட மாநிலங்களுக்கு இடம் பெயர்ந்தனர். அவர்கள் குறித்த தகவல்கள் எதுவும் தெரியாது என வசந்த் கூறி விட்டார். அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், வசந்தின் கூட்டாளிகளை தேடி வருகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும்
-
மூதாட்டியின் கண்கள் தானம்
-
கட்டட தொழிலாளர் சங்கம் தர்ணா போராட்டம்
-
ராஜிவ்காந்தி கால்நடை மருத்துவ கல்லுாரியில் 3 நாள் சர்வதேச கருத்தரங்கம் துவங்கியது
-
சைவம், வைணவம் குறித்து இழிவு பேச்சு: மார்ச் 24ல் பொன்முடி ஆஜராக உத்தரவு
-
முன்னாள் அமைச்சர் மல்லாடிக்கு காங்., துணை தலைவர் கண்டனம்
-
6000 டன் நெல்:அரசு நேரடி கொள்முதல் மையங்களில் பெறப்பட்டது:வியாபாரிகளிடம் ஏமாற வேண்டாம் என எச்சரிக்கை