டி20 உலககோப்பை சூப்பர் 8 சுற்று: இந்திய அணி அபார வெற்றி
சென்னை: டி20 உலகக் கோப்பை சூப்பர் 8 சுற்றில் ஜிம்பாப்வே அணிக்கு, எதிரான போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
டி20 உலகக் கோப்பை தொடரில் தற்போது சூப்பர் 8 சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன.
இன்று சென்னை, எம்.ஏ. சிதம்பரம்(சேப்பாக்கம்) மைதானத்தில், நடைபெற்ற போட்டியில் இந்தியா, ஜிம்பாப்வே அணிகள் மோதின.
லீக் சுற்றில் 3 போட்டிகளிலும் வென்ற இந்திய அணி, சூப்பர் 8 சுற்றில் முதல் போட்டியில் தென்னாப்பிரிக்காவிடம் தோல்வியடைந்த பிறகு, அரையிறுதி வாய்ப்பைத் தக்கவைக்க இந்த போட்டி முக்கியம் வாய்ந்தது.
இந்த நிலையில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பீல்டிங் தேர்வு செய்துள்ளது. இதனையடுத்து இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.
இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா களமிறங்கினர். இந்திய அணி வீரர்கள் சிறப்பான துவக்கம் தந்தனர்.
இந்த நிலையில், சஞ்சு சாம்சன் 24 ரன்களில் அவுட் ஆகி வெளியேற, அபிஷேக் சர்மா அதிரடியாக விளையாடினார். அவருக்கு துணையாக இஷன் கிஷன் இணைந்து ரன் குவிப்பில் ஈடுபட்டார்.
அபிஷே க் சர்மா, ஹர்திக் பாண்ட்யா அரைசதம்:
அதிரடி காட்டிய அபி ஷேக் சர்மா அரை சதம் கடந்தார். சிறப்பாக விளையாடிய இஷான் கிஷன் 38 ரன்கள் சேர்த்த நிலையில் அவுட் ஆனார். அவரை தொடர்ந்து கேப்டன் சூர்யகுமார் யாதவ் இணைந்தார். அதிரடியாக விளையாடிய, அபி ஷேக் சர்மா 55 ரன்கள் சேர்த்திருந்த போது மபோசா பந்தில் ஆட்டமிழந்தார்.கேப்டன் சூர்யகுமார் யாதவ் உடன் ஹர்திக் பாண்டயா இணைந்தார். கேப்டன் சூர்யகுமார் யாதவ் அதிரடியாக 33 ரன் சேர்த்த நிலையில் அவுட் ஆனார். அடுத்து திலக் வர்மா இணைந்தார்.இருவரும் அதிரடியாக விளையாடினர். ஹர்திக் பாண்ட்யா ஆட்டமிழக்காமல் அரை சதம் (50 ரன்)அடித்தார். திலக் வர்மா ஆட்டமிழக்காமல் 44 ரன் சேர்க்க இந்திய அணி, 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 256 ரன்கள் குவித்தது.
ஜிம்பாப்வே அணியின் துவக்க ஆட்டக்கார் பிரைன் பென்னட் மட்டும் நிலைத்து விளையாடி அரை சதம் கடந்தார். மற்றவர்கள் நிலைக்கவில்லை. மருமணி 20 ரன்களிலும் டியோன் மியர்ஸ் 6 ரன்னிலும் அவுட் ஆகி வெளியேறினர். நிதானமாக விளையாடிய கேப்டன் சிக்கந்தர் ராஸா 31 ரன்களில் அர்தீப் சிங் பந்தில் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து வந்த ரியான் புரி ரன் ஏதும் எடுக்காமல் அர்ஷ்தீப் பந்தில் ஆட்டமிழந்தார். அதை தொடர்ந்து வந்த டோனி மன்யோங்கா 11 ரன்களில் அர்ஷ்தீப் சிங் பந்தில் போல்டானார். பின்னர் வந்த தஷிங்கா முசிகிவா 7 ரன்னில் துபே பந்தில் ஆட்டமிழந்தார்.
257 ரன் என்ற கடின இலக்குடன் அடுத்து விளையாடி ய ஜிம்பாப்வே அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 184 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதனையடுத்து இந்திய அணி, 72 ரன்களில் அபார வெற்றி பெற்றது. இந்திய தரப்பில் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
ஜிம்பாப்வே அணியின் துவக்க ஆட்டக்காரர் இறுதிவரை ஆட்டமிழக்காமல் அதிரடியாக விளையாடி 97 ரன்கள் எடுத்தார். அவரது ஆட்டம் அணியின் வெற்றிக்கு உதவவில்லை.
மேலும்
-
ராஜ்தீப் சர்தேசாய் அறிமுகம்
-
பண மூட்டை நீதிபதி விவகாரம்: விசாரணை குழு பதவி காலம் நீட்டிப்பு
-
பிரிட்டன் அரசுக்கு ரூ.35,000 கடன் தந்த இந்தியர் 109 ஆண்டுகளுக்கு பின் திருப்பி கேட்கும் வாரிசுகள்
-
திவாலானது கிழக்கிந்திய கம்பெனி 170 ஆண்டுக்கு பின் மீண்டும் மூடல்
-
மார்க்சிஸ்ட் - - காங்., தொண்டர்கள் மோதல் கேரளாவில் பதற்றம்
-
அனில் அம்பானி மீது சி.பி.ஐ., புதிய வழக்கு