மல்யுத்தம்: சுஜீத் 'தங்கம்'
திரானா: மல்யுத்தம் 'ரேங்கிங்' தொடரில் தொடர்ந்து இரண்டாவது தங்கம் வென்றார் சுஜீத்.
அல்பேனியாவின் திரானா நகரில் சர்வதேச மல்யுத்த 'ரேங்கிங்' தொடர் நடக்கிறது. ஆண்களுக்கான 'பிரீஸ்டைல்' போட்டிகள் நடந்தன. 65 கிலோ பிரிவில் இந்தியாவின் சுஜீத் பைனலுக்கு முன்னேறினார். இதில் சுஜீத், அஜர்பெய்ஜானின் ரஷீத் பாபஜேடை எதிர்கொண்டார்.
போட்டி துவங்கிய 78 வது வினாடியில் சுஜீத், 10-0 என்ற முன்னிலையுடன் வெற்றி பெற்றார். இதையடுத்து, இத்தொடரில் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக (2025, 2026) தங்கம் வென்றார். மொத்தம் பங்கேற்ற 4 போட்டியில் 47 புள்ளி எடுத்து மிரட்டிய சுஜீத், எதிரணி வீரர்களுக்கு 4 புள்ளி மட்டும் விட்டுக் கொடுத்தார்.
தவிர, கடந்த ஆண்டு ஹங்கேரி ஓபன், தற்போது ஜாக்ரெப் ஓபன், திரானா என தொடர்ந்து மூன்று சர்வதேச ரேங்கிங் தொடரில், சுஜீத் தங்கம் கைப்பற்றினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ராஜ்தீப் சர்தேசாய் அறிமுகம்
-
பண மூட்டை நீதிபதி விவகாரம்: விசாரணை குழு பதவி காலம் நீட்டிப்பு
-
பிரிட்டன் அரசுக்கு ரூ.35,000 கடன் தந்த இந்தியர் 109 ஆண்டுகளுக்கு பின் திருப்பி கேட்கும் வாரிசுகள்
-
திவாலானது கிழக்கிந்திய கம்பெனி 170 ஆண்டுக்கு பின் மீண்டும் மூடல்
-
மார்க்சிஸ்ட் - - காங்., தொண்டர்கள் மோதல் கேரளாவில் பதற்றம்
-
அனில் அம்பானி மீது சி.பி.ஐ., புதிய வழக்கு
Advertisement
Advertisement