பாக்., பதில் தாக்குதல்: ஆப்கனில் 133 பேர் பலி

8


காபூல்: ஆப்கானிஸ்தான் மற்றும பாகிஸ்தான் இடையிலான மோதல் முற்றியுள்ளது. விமானப்படை நடத்திய தாக்குதலில் ஆப்கனில் 133 பேர் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் கூறியுள்ளது.


அண்டை நாடுகளான பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே கடந்த ஓராண்டுக்கும் மேலாக கடும் மோதல் தொடர்ந்து நடந்து வருகிறது. பாகிஸ்தான் நிலைகள் மீது ஆப்கானிஸ்தான் தாக்குவதும், அதற்கு பதிலடியாக பாகிஸ்தான் விமானப்படை மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது.


இந்நிலையில் கடந்த வாரம் பாகிஸ்தான் விமானப்படை நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக அந்நாட்டு நிலைகள் மீது ஆப்கானிஸ்தான் தாக்குதல் நடத்தியது. இதில் பாகிஸ்தான் வீரர்கள் 55 பேர் கொல்லப்பட்டதாக ஆப்கான் அறிவித்தது. 19 பாகிஸ்தான் ராணுவ செக்போஸ்ட்கள், மற்றும் இரண்டு தளங்கள் அழிக்கப்பட்டதாக தெரிவித்தது. ஆனால், ஆனால், இதனை மறுத்த பாகிஸ்தான் 2 அல்லது 3 வீரர்கள் தான் இறந்துள்ளதாகவும், ஆப்கானை சேர்ந்த 36 பேர் கொல்லப்பட்டதாகவும் தெரிவித்தது.


இந்நிலையில், பாகிஸ்தானின் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் வெளியிட்ட சமூக ஊடகப் பதிவில் கூறியுள்ளதாவது; எங்களது பொறுமை எல்லையை கடந்து விட்டது. தற்போது உங்களுக்கும், எங்களுக்கும் இடையில் நடப்பது நேரடி எனத் தெரிவித்துள்ளார்.


இந்நிலையில் ஆப்கனுக்கு பதிலடியாக அந்நாட்டின் காந்தகார், காபூல் மற்றும் பக்தியா ஆகிய மாகாணங்கள் மீது பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல் நடத்தியது.இதில் சிில ராணுவ தளங்கள்அழிக்கப்பட்டன. இந்த தாக்குதலில் ஆப்கானை சேர்ந்த 133 பேர் கொல்லப்பட்டதாக தெரிவித்துள்ளது. பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க தற்கொலைப்படையினர் தயாராக உள்ளதாக ஆப்கானை ஆளும் தலிபான் அரசு தெரிவித்துள்ளது.


இந்நிலையில், இரு நாடுகளும் அமைதி காக்கும்படி சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் வலியுறுத்தி உள்ளன. இரு நாடுகளுக்கு இடையே சமரசம் செய்ய தயாராக உள்ளதாக ஈரானும் அறிவித்துள்ளது.

Advertisement